துபையில் ரூ.17 கோடிக்கு ஏலம் போன நம்பர் பிளேட்டின் சிறப்பு என்ன?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
துபையில் ரூ.17 கோடிக்கு ஏலம் போன நம்பர் பிளேட்டின் சிறப்பு என்ன?

பட மூலாதாரம், RTA நம்பர் பிளேட் ஒன்று சுமார் ரூ.17 கோடிக்கு விற்பனையானது என்ற செய்தி உங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். சனிக்கிழமை துபையில் நடைபெற்ற, தனித்துவமான வாகனப் பதிவு எண்களுக்கான ஏலத்தில், CC44 என்ற எண் 67.2 லட்சம் திர்ஹாம்களுக்கு ( இந்திய மதிப்பில் சுமார் 17 கோடி ரூபாய் ) விற்பனையானது. துபையின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம், சொகுசு வாகனங்களுக்கான நம்பர் பிளேட் ஏலத்தின் மூலம் மொத்தம் 6.5721 கோடி திர்ஹாம்களை (சுமார் ₹170 கோடி ரூபாய் ) திரட்டியுள்ளது. இந்த ஏலத்தில் அதிகபட்ச விலையாக CC44 என்ற எண் கொண்ட நம்பர் பிளேட் 6.72 மில்லியன் திர்ஹம்களுக்கு (சுமார் ₹17 கோடி ரூபாய்) விற்கப்பட்டது. அடுத்ததாக, BB18 என்ற பதிவு எண் 66.2 லட்சம் திர்ஹாம்களுக்கும், BB80 என்ற பதிவு எண் 59 லட்சம் திர்ஹாம்களுக்கும் விற்பனையாகின. BB117 என்ற பதிவு எண் 10 லட்சம் திர்ஹாம்களுக்கும் அதிகமான தொகைக்கு விற்பனையானது. திறந்த மற்றும் இணையவழி ஏலங்கள் தொடர்பான தங்களது உத்தி வெற்றிகரமாகச் செயல்படுவதை இந்த ஏல முடிவுகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக துபையின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். "இந்த நடைமுறை, வெளிப்படைத்தன்மை, பாரபட்சமின்மை, பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குதல் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது" என்று அவர்கள் கூறினர். End of அதிகம் படிக்கப்பட்டது தனித்துவமான வாகனப் பதிவு எண்களை வாங்க விரும்பியவர்கள் இந்த ஏலத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பட மூலாதாரம், RTA பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு இந்த நம்பர் பிளேட்டுகள் வெறும் வாகனப் பதிவு எண்கள் மட்டுமல்ல. அவற்றின் உரிமையாளர்களுக்கு அவை சிறப்பு முக்கியத்துவத்தையும் கொடுக்கின்றன. மேலும் அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தையும் தனித்துவத்தையும் பிரதிபலிக்கின்றன. துபையில் நடைபெற்ற 121 ஆவது திறந்த ஏலத்தில், 60 தனித்துவமான வாகனப் பதிவு எண்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. இரண்டு இலக்கங்கள் முதல் ஐந்து இலக்கங்கள் வரையிலான எண்கள் பல்வேறு குறியீடுகளின் கீழ் ஏலம் விடப்பட்டன. இந்த நம்பர் பிளேட்டுகளின் சிறப்பு என்னவென்றால், அவற்றின் எண்கள் சுருக்கமாகவும், தனித்துவமாகவும், எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளக்கூடியதாகவும் இருப்பதுதான். இதனால்தான் சிலர் அவற்றைப் பெறுவதற்குப் பெரும் தொகையைச் செலவிடத் தயாராக உள்ளனர். தனித்துவமான வாகனப் பதிவு எண்களை வாங்கவும் விற்கவும் துபையில் புதிய இணையவழி தளம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த தி நேஷனல் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 'மஸால்' என்ற செயலி மூலம் ஒருவர் நம்பர் பிளேட்டை வாங்கினால், அந்த நம்பர் பிளேட்டின் உரிமை அவருக்கு மாறும் வரை அவர் செலுத்திய பணம் பாதுகாப்பாக வைக்கப்படும். இதுவரை சமூக ஊடகங்கள், தனியார் முகவர்கள், பாரம்பரிய முறைகள் மூலமாகவே இத்தகைய நம்பர் பிளேட்டுகளின் விற்பனை பெரும்பாலும் நடந்து வந்தது. இந்தப் பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பானதாக மாற்றுவதே புதிய தளத்தின் நோக்கம். விதிமுறைகளுக்கு ஏற்ப, வாங்குபவர்களின் அடையாளத்தைச் சரிபார்க்கும் பாதுகாப்பான இணையவழிச் சந்தையாக இந்தத் தளம் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துபையில் தனியார் பதிவு எண்களுக்கான சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது, குறிப்பாக ஒற்றை இலக்கங்கள் மற்றும் தனித்துவமான எண்களைக் கொண்ட பதிவு எண்களுக்கான தேவையும் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மஸால் செயலியின் தகவலின்படி, துபையில் கடந்த மூன்று ஆண்டுகளில் மதிப்புமிக்க நம்பர் பிளேட்டுகளின் விற்பனை மதிப்பு 170 கோடி திர்ஹாம்களை எட்டியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை