ஐசிசி தரவரிசையில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக்கின் ஆதிக்கம் குறித்து குறித்து... இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் - AP ஐசிசி தரவரிசையில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக்கின் ஆதிக்கம் பலரையும் வியக்க வைத்துள்ளது. மூன்று ஃபார்மட்டிலும் டாப் 10ல் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். ஐசிசியின் டெஸ்ட் தரவரிசையில் முதலிடமும் டி20 தரவரிசையில் நான்காவது இடமும் ஒருநாள் தரவரிசையில் எட்டாவது இடமும் பிடித்துள்ளார். முன்னதாக இந்த மாதிரி அனைத்து வடிவலான (டி20, ஒருநாள், டெஸ்ட்) கிரிக்கெட்டின் தரவரிசையில் அசத்தியவர்களாக ரிக்கி பாண்டிங், விராட் கோலி, மேத்திவ் ஹௌடன், ஜஸ்பிரீத் பும்ரா இருந்துள்ளார்கள். நவீன யுகத்தில் ஹாரி புரூக் இந்த சாதனைப் பட்டியலில் இணிந்துள்ளார். சமீபத்திய ஒருநாள் போட்டியில் அதிவேகமாக இரட்டைச் சதம் அடித்து சாதனை படைத்ததும் குறிப்பிடத்தக்கது. 41 டெஸ்ட்டில் 3,610 ரன்களும் 47 ஒருநாள் போட்டிகளில் 1,738 ரன்களும் 71 டி20 போட்டிகளில் 1,702 ரன்களும் குவித்துள்ளார். சராசரிகள் முறையே 53.09, 40.42, 36.21 என்றிருக்கின்றன. அதிரடியாகவும் விளையாடும் ஹாரி புரூக் நவீன யுகத்தில் தலைசிறந்த வீரராக தன்னை நிரூபித்து வருகிறார். இந்தியாவின் ஷுப்மன் கில் டி20 அணியில் இடம் கிடைக்காததால் இந்தப் பட்டியலில் இல்லாமல் இருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER
டி20, டெஸ்ட், ஒருநாள் போட்டிகளின் ஐசிசி தரவரிசையில் ஹாரி புரூக்கின் ஆதிக்கம்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Sports
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗