திரையரங்குகளில் டிக்கெட் விலை உயர்த்தப்படுவது குறித்து... திரையரங்கு - பிரதிப் படம் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் டிக்கெட் விலையை உயர்த்த மாநில அரசிடம் திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை (அக். 30) சந்தித்துப் பேசினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் - திரையரங்குகள் செயல்படும் நேரத்தை காலை 6 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரையில் நீட்டிப்பது, சிறிய முதலீட்டில் உருவாகும் திரைப்படங்களுக்காக அரசு சார்பில் ஓடிடி தளம் உருவாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில், திரையரங்குகளில் டிக்கெட்டுகளின் விலையை உயர்த்த வலியுறுத்தியும் முதல்வர் விஜய்யிடம் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர். இதன்படி, திரையரங்குகளில் வரிகள் மற்றும் பராமரிப்புக் கட்டணங்கள் இல்லாமல், டிக்கெட்டுகளின் விலை அதிகபட்சமாக ரூ. 150-லிருந்து ரூ. 250-ஆக உயர்த்த வேண்டும். மேலும், ஒவ்வோர் ஆண்டும் டிக்கெட் விலையை 10 சதவிகிதம் உயர்த்த அனுமதி வேண்டும். ஒரு டிக்கெட்டுக்கான திரையரங்கு பராமரிப்புக் கட்டணத்தை ரூ. 6-லிருந்து ரூ. 10-ஆக உயர்த்த வேண்டும். மின்சார கட்டணத்தை நிர்ணயிக்க, திரையரங்குகளை குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களாக வகைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
டிக்கெட் விலையை ரூ.150-லிருந்து ரூ. 250-ஆக உயர்த்த திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗