லீக் 1 கால்பந்துத் தொடரில் அபார வெற்றியைப் பெற்ற நடப்பு சாம்பியன் பிஎஸ்ஜி குறித்து... ஹகிமியின் போஸ்டர் - படங்கள்: எக்ஸ் / பிஎஸ்ஜி பிரான்ஸில் நடைபெறும் லீக் 1 கால்பந்துத் தொடரில் நடப்பு சாம்பியன் பிஎஸ்ஜி 5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியுடன் பிஎஸ்ஜி அணி 20 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தையும் தக்கவைத்துள்ளது. லில்லி அணி 18 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் இருக்கிறது. லீ ஹாவ்ரே தனது சொந்த மண்ணில் பிஎஸ்ஜி உடன் நேற்றிரவு மோதியது. இந்தப் போட்டியில் தொடக்கத்தில் லீ ஹாவ்ரே 18ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 1-0 என முன்னிலை வகித்தது. அடுத்ததாக பிஎஸ்ஜி அணியின் சார்பில் மிகா கோட்ஸ் 26ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 1-1 என சமன்படுத்தப்பட்டது. அடுத்ததாக பிஎஸ்ஜி அணியின் நட்சத்திர டிஃபென்டர் அச்ரஃப் ஹகிமி ஹாட்ரிக் கோல் (28, 55, 69ஆவது நிமிஷங்களில்) அடித்து அசத்தினார். இத்துடன் 62ஆவது நிமிஷத்தில் மயுலு கோல் அடித்து அபார வெற்றிக்கும் உதவினார். இந்தப் போட்டியில் பிஎஸ்ஜி அணி 71 சதவிகித நேரம் பந்தை தங்கள் வசம் வைத்திருந்தார்கள். 19ஆவது நிமிஷத்துக்குப் பிறகு தங்களது முழுமையான ஆதிக்கத்தைக் கொண்டு வந்தார்கள். இந்தப் போட்டியில் அகிமி மூன்று கோல்கள், 2 அசிஸ்ட் செய்து மிரட்டினார். நடப்பு சாம்பியனான பிஎஸ்ஜி அணி தொடர்ச்சியாக 6 வெற்றிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்கள். Quel match d'Achraf Hakimi ! â½ï¸â½ï¸â½ï¸ + ð°ï¸ð°ï¸ pic.twitter.com/pN2ryj85ZI தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
டிஃபென்டர் ஹகிமியின் ஹாட்ரிக் கோல், 2 அசிஸ்ட்..! அபார வெற்றியில் பிஎஸ்ஜி!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Sports
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗