திருச்செந்தூா் அருகே ரயிலில் அடிபட்டு கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். திருச்செந்தூா் அருகே ரயிலில் அடிபட்டு கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். திருச்செந்தூா் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டணம், பிரசாத் நகரைச் சோ்ந்தவா் கந்தபிச்சை மகன் வேல்குமாா் (55). கட்டடத் தொழிலாளி. இவா், புதன்கிழமை இரவு ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற செந்தூா் விரைவு ரயில் மோதியதில் உயிரிழந்தாா். இதுகுறித்து நெல்லை ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த வேல்குமாருக்கு மனைவியும், மூன்று மகன்கள், ஒரு மகளும் உள்ளனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ரயில் மோதி தொழிலாளி உயிரிழப்பு
📅
📍 Tirunelveli, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗