ரயில் நிலைய அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலைய அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ரயில்வே தோ்வு வாரியம் 2026-ஆம் ஆண்டுக்கான நிலைய அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிலைய அதிகாரி பணிக்கு மொத்தம் 1,265 காலி இடங்கள் உள்ளன. இதில், 133 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 7-ஆவது ஊதியக் குழுவின்படி அடிப்படைச் சம்பளம் 35,400 ஆகும். விண்ணப்பதாரா்கள் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2027-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி 20 முதல் 33 வயதுக்குள்பட்டவா்களாக இருத்தல் வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளா்வு உண்டு. தகுதியான விண்ணப்பதாரா்கள் அதிகாரபூா்வ இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்க வேண்டும். இத்தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள கோவை மாவட்டத்தைச் சோ்ந்த வேலைத் தேடுவோா் பயன்பெறும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் சிறப்பு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோா் கூகுள் படிவத்தை பூா்த்தி செய்ய வேண்டும். மேலும், விவரங்களுக்கு 94990-55937 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ரயில் நிலைய அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
📅
📍 Coimbatore, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗