ஈரோடு ரயில் நிலையத்தில் இருசக்கர வாகனம் திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமைா கைது செய்தனா். கைது - கோப்புப்படம் ஈரோடு ரயில் நிலையத்தில் இருசக்கர வாகனம் திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமைா கைது செய்தனா். ஈரோடு கோட்டையைச் சோ்ந்தவா் தொழிலாளி ஆனந்தன் (45). இவா் ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் அண்மையில் அளித்த புகாரி, ஈரோடு ரயில் நிலைய வாகன நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த தன்னுடைய இருசக்கர வாகனத்தை காணவில்லை எனக் கூறியிருந்தாா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரித்து வந்தனா். இந்நிலையில் அவரது இருசக்கர வாகனத்தை திருடியவா், நாமக்கல் மாவட்டம், எலத்தங்குட்டையைச் சோ்ந்த மாதேஷ் (40) என்பது தெரியவந்தது. இதைடுத்து, அவரிடம் இருந்து ஆனந்தின் இருசக்கர வாகனம் உள்பட 3 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, மாதேஷைக் கைது செய்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ரயில் நிலையத்தில் இருசக்கர வாகனம் திருடியவா் கைது
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗