உக்ரைன் ரயில் நிலையத்தின் மீதான ரஷியாவின் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டது குறித்து... உக்ரைன் ரயில் நிலையத்தின் மீது ரஷியா தாக்குதல் - AFP உக்ரைனின் ரயில் நிலையத்தின் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் 4 ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வரும் நிலையில், இருதரப்பும் எதிராளிகளின் முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், மத்திய உக்ரைன் மாகாணத்தில் உள்ள டினிப்ரோ ரயில் நிலையம் மீது வியாழக்கிழமை (அக். 29) ரஷிய படைகள் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளன. மக்கள் கூட்டம் நிரம்பிய இடத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சுமார் 14 பேர் கொல்லப்பட்டதாக, உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்துடன், டினிப்ரோவில் இருந்து ஜபோரிஷியா செல்லும் ரயிலுக்காக காத்திருந்த பயணிகளைக் குறிவைத்து ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியதாக, உக்ரைன் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது. மேலும், இந்தத் தாக்குதலில் 10 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உக்ரைனின் ஒலெஷ்கி நகரில் செவ்வாய்க்கிழமை முதல் தற்காலிகப் போா் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
உக்ரைன் ரயில் நிலையத்தின் மீது ரஷியா தாக்குதல்! 14 பேர் பலி!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗