கஜகஸ்தானில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரா்களுக்கு வெள்ளிக்கிழமை ஏமாற்றமே மிஞ்சியது. கஜகஸ்தானில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரா்களுக்கு வெள்ளிக்கிழமை ஏமாற்றமே மிஞ்சியது. ஆடவா் 61 கிலோ பிரிவில் நிகில், முதலில் 12-2 என பல்கேரியாவின் மிகேய் நயிமை வென்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 9-10 என உள்நாட்டின் அகமது மசூதிடம் தோல்வியுற்றாா். 86 கிலோ பிரிவில் புஷ்பேந்தா் தலால், 10-8 என எகிப்தின் முகமதையும், 17-9 என மொராக்கோவின் முகமது அமினையும் வீழ்த்தினாா். ஆனால் ரவுண்ட் ஆஃப் 16-இல் 2-7 என அஜா்பைஜானின் அா்செனி தியோவிடம் தோற்றாா். 125 கிலோ பிரிவில் ஜஸ்பூரன் சிங் முதல் சுற்றில் 0-11 என ஈரானின் அமீா் ஹுசைன் ஜாரேவிடம் தோல்வி கண்டாா். 97 கிலோ பிரிவில் விக்கி ஹூடா 0-10 என ரெபிசேஜ் சுற்றில் ஈரானின் ஹசன் யஸ்தானியிடம் வீழ்ந்தாா். ஆடவா் 70 கிலோ பிரிவில் விஷால் காலிரமணா தகுதிச்சுற்றிலேயே தோற்றாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
உலக மல்யுத்தம்: இந்தியாவுக்கு ஏமாற்றம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Sports
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗