சென்செக்ஸ் 1,718.01 புள்ளிகள் உயர்ந்து 81,028.02 புள்ளிகளாகவும், நிஃப்டி 439.75 புள்ளிகள் உயர்ந்து 25,030.35 ஆக நிலைபெற்றது. மும்பை: வெளிநாடுகளில் நிலவும் குழப்பங்களுக்கு மத்தியில், முதலீட்டாளர்கள் உள்நாட்டு பங்குச் சந்தையை பாதுகாப்பான புகலிடமாகக் கருதியதால், இந்தியப் பங்குகள் உலகளாவிய சரிவை மீறி 7வது நாளாக குறியீடுகள் ஏற்றம் கண்டன. தொடர்ந்து வரும் வெளிநாட்டு நிதி மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகியவை முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரித்ததால், சென்செக்ஸ் 1,718 புள்ளிகள் உயர்ந்தும், நிஃப்டி 25,00 புள்ளிகளை கடந்து பயணித்தது. 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 1,718.01 புள்ளிகள் உயர்ந்து, இன்றைய உச்சபட்ச நிலையான 81,028.02 புள்ளிகளாகவும், 50 புங்குகளை கொண்ட நிஃப்டி 439.75 புள்ளிகள் உயர்ந்து இன்றைய உச்சபட்ச அளவான 25,030.35 ஆக நிலைபெற்றது. கடந்த ஏழு தொடர் அமர்வுகளில், சென்செக்ஸ் 7,781.99 புள்ளிகளும், நிஃப்டி 2,331.5 புள்ளிகள் உயர்ந்துள்ளன. மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் வெளியிட்ட வெளியிட்ட 2வது காலாண்டு முடிவை தொடர்ந்து அதன் பங்குகள் 6.15 சதவீதம் உயர்ந்தன. குறிப்பாக, வாகனப் பிரிவில் ஏற்பட்ட வலுவான வருவாய் வளர்ச்சி நிறுவனத்தின் லாப உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. சென்செக்ஸில் ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, டைட்டன், ஆக்சிஸ் வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன. மறுபுறம் பவர் கிரிட் மட்டுமே சரிந்தது. ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி 6.02 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 225 குறியீடு 5.96 சதவீதமும் சரிந்தன. ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடும் 1 சதவீதத்திற்கும் மேல் சரிந்தன. ஐரோப்பிய சந்தைகள் சரிவுடன் வர்த்தகமானது. நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க பங்குச் சந்தை கடுமையாக சரிந்து முடிவடைந்தன. நாஸ்டாக் கூட்டுக்குறியீடு 5.52 சதவிகிதம் சரிந்தது, எஸ்&பி 500 குறியீடு 4.36 சதவிகிதம் வீழ்ச்சியடைந்த நிலையில் டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி குறியீடும் 3.44% சரிந்தது. தரவுகளின் அடிப்படையில், வியாழக்கிழமையன்று வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 14,974.68 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 1.50 சதவீதம் சரிந்து 96.82 அமெரிக்க டாலராக உள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
உலகளாவிய பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்தியிலும் சென்செக்ஸ் 1,718 புள்ளிகள் உயர்வு; 25,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Business
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗