உளுந்தூர்பேட்டை ரேஷன் அரிசியில் நெளிந்த புழுக்கள்.. லாரியையே சிறைபிடித்த கள்ளக்குறிச்சி மக்கள்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: oneindia.com (original report) ↗
உளுந்தூர்பேட்டை ரேஷன் அரிசியில் நெளிந்த புழுக்கள்.. லாரியையே சிறைபிடித்த கள்ளக்குறிச்சி மக்கள்

கள்ளக்குறிச்சி: அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்துவதுடன், பொதுமக்களுக்கு தரமான அரிசி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக குறைந்த விலையில் சன்னரக அரிசி விற்பனை, புகார் தெரிவிக்க பிரத்யேக எண்கள் என அடுத்தடுத்த அறிவிப்புகளும் வெளியாகி வருகின்றன. ஆனாலும், ரேஷன் அரிசி விநியோகத்தில் ஏற்படும் குறைபாடுகள் மட்டும் முழுமையாக தீர்ந்தபாடில்லை. அப்படியொரு சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நடந்துள்ளது. பொதுமக்களுக்கு சன்னரக அரிசி குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்வதுடன், அரிசி விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் இதன் ஒரு பகுதியாக அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் ஒரு கிலோ சன்னரக அரிசி ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், அத்தியாவசியப் பொருட்களை பதுக்கி வைப்பது, கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. அதுமட்டுமல்ல, கூட்டுறவு அங்காடிகளில் ஒரு கிலோ அரிசியை ரூ.30-க்கு அதிகமாக விற்பனை செய்தாலோ, தரமற்ற அரிசி வழங்கினாலோ அல்லது கடையை திறக்காமல் இருந்தாலோ பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். இதற்காக கூட்டுறவுத் துறை சார்பில் 98840 00845 என்ற பிரத்யேகமான வாட்ஸ்அப் குறைதீர் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகள் மற்றும் பொது விநியோகத் திட்டம் தொடர்பான புகார்களை 1967, 1800 425 5901 ஆகிய கட்டணமில்லா எண்களிலும் தெரிவிக்கலாம். 99809 04040 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலமாகவும் ரேஷன் கடை தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம். இவ்வளவு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், உளுந்தூர்பேட்டை அருகே ரேஷன் அரிசியின் தரம் தொடர்பாக பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள்.. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூட்டாடி கள்ளக்குறிச்சி கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு ரேஷன் அரிசி விநியோகம் செய்வதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து லாரி மூலம் அரிசி மூட்டைகள் கொண்டுவரப்பட்டன. அந்த மூட்டைகளை ரேஷன் கடையில் இறக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பொதுமக்கள், அரிசி தரமற்ற முறையில் இருப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்... மேலும் அரிசி மூட்டைகளை இறக்க விடாமல் லாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு தரமான அரிசி வழங்க வேண்டும் என்றும், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள அரிசிக்கு பதிலாக மாற்று அரிசி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் அசோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். லாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்... ஆனால் பொதுமக்கள் சமாதானம் ஆகவில்லை.. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிவு கழகம் மூலம் ரேஷன் கடைக்கு விநியோகிக்க கொண்டுவரப்பட்ட அரிசியில் குழுக்கள் நிறைந்திருக்கின்றன.. எப்போதுமே தரமற்ற அரிசிதான் வழங்குகிறார்கள்.. சாப்பிட முடியாத அளவுக்கு அந்த அரிசியில் புழுக்கள் உள்ளன.. தரமான அரிசி வழங்கும் வரை சிறைபிடித்து வைத்துள்ள வாகனத்தை விடுவிக்க முடியாது என்றனர்.. தரமற்ற அரிசிக்கு பதிலாக தரமான மாற்று அரிசி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பொதுமக்கள் வலியுறுத்தியதையடுத்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். ரேஷன் அரிசியின் தரம் தொடர்பாக பொதுமக்கள் லாரியை முற்றுகையிட்டு, லாரியையே சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...!!!

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை