உ.பி. வாக்காளர் பட்டியலில் 1.27 கோடி இந்துக்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக முதல்வர் யோகி கவலை

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
உ.பி. வாக்காளர் பட்டியலில் 1.27 கோடி இந்துக்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக முதல்வர் யோகி கவலை

பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றும் யோகி ஆதித்யநாத் புதுடெல்லி: உத்தரப் பிரதேச வாக்காளர் பட்டியலில் 1.27 கோடி இந்து வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கவலை தெரிவித்துள்ளார். தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்யுமாறு பாஜக நிர்வாகிகளை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் மூத்த தலைவரும் முதல்வருமான யோகி ஆதித்யநாத், “உத்தரப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து 1.27 கோடி இந்து வாக்காளர்களின் பெர்கள் விடுபட்டுள்ளன. இவ்வாறு பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் 28 தொகுதிகளில் கட்சியின் நிலையை பலவீனப்படுத்துவதாக உள்ளது. பஞ்சாயத்து வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 66 லட்சம் பேரின் பெயர்கள், சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளன. அதேபோல், அரசு நலத்திட்ட பயனாளிகள் 55 லட்சம் பேரின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இல்லை. மேலும், 18-19 வயதுக்கு உட்பட்ட சுமார் 4.5 லட்சம் இளைஞர்களின் பெயர்களும் பட்டியலில் இல்லை. சிறப்பு தீவிர மறு ஆய்வு பணியின்போது, மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் வெறும் 4 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களும் பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்ய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் இணைந்து பாஜக தொண்டர்கள் செயல்பட வேண்டும். மேலும், இந்த பணியை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். விடுபட்ட இந்து வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்யும் பொறுப்பு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் பிற பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் சுமார் 16 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இருக்க வேண்டும். ஆனால், தற்போது சுமார் 13 கோடி வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்” என தெரிவித்தார். சிறப்பு தீவிர மறு ஆய்வுப் பணிக்குப் பிறகு உத்தரப் பிரதேசத்தின் வாக்காளர் பட்டியலில் இருந்து 2.04 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த நீக்கம் பெரும்பாலும் நகர்ப்புறங்களில்தான் நிகழ்ந்துள்ளன. அதிலும், பெண் வாக்காளர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், 84 லட்சத்துக்கும் அதிகமான புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, உத்தரப்பிரதேசத்தில் தற்போது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 13 கோடியே 39 லட்சத்து 84 ஆயிரத்து 792 ஆக உள்ளது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை