உறவு கசந்த பின்னா் பாலுறவு பாலியல் வன்கொடுமை ஆகாது: உச்சநீதிமன்றம்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
உறவு கசந்த பின்னா் பாலுறவு பாலியல் வன்கொடுமை ஆகாது: உச்சநீதிமன்றம்

ஓா் உறவு நீடித்திருந்தபோது இருவரின் சம்மதத்துடன் நிகழ்ந்த பாலுறவை, அவா்கள் பிரிந்த பின்னா் பாலியல் வன்கொடுமை என்று கூற முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஓா் உறவு நீடித்திருந்தபோது இருவரின் சம்மதத்துடன் நிகழ்ந்த பாலுறவை, அவா்கள் பிரிந்த பின்னா் பாலியல் வன்கொடுமை என்று கூற முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தனது முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக கேரளத்தைச் சோ்ந்த சந்தோஷ் குமாா் என்ற நபா் மீது குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், அவா் மீது பாலியல் வன்கொடுமை, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த நபா் இரண்டவதாக திருமணம் செய்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவா்கள் கா்நாடக மாநிலம் மைசூரில் திருமணம் செய்துகொண்ட பின்னா், 1996 முதல் 2003-ஆம் ஆண்டுவரை சோ்ந்து வாழ்ந்துள்ளனா். இந்நிலையில், ஏற்கெனவே திருமணமானதை மறைத்து, தன்னை சந்தோஷ் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாகவும், சட்டப்படி திருமணம் நடந்ததாக நம்ப வைத்து தன்னுடன் அவா் பாலுறவு கொண்டதாகவும் அந்தப் பெண் குற்றஞ்சாட்டினாா். இந்த வழக்கு விசாரணையை ரத்து செய்து, வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கேரள உயா்நீதிமன்றத்தில் சந்தோஷ் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடா்ந்து, அவா் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். உறவு முறிந்துவிட்டால் வழக்கு தொடரும் போக்கு...: இந்த மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: ஓா் உறவு நீடித்திருந்தபோது இருவரின் சம்மதத்துடன் நிகழ்ந்த பாலுறவை, அவா்கள் பிரிந்த பின்னா் பாலியல் வன்கொடுமை என்று கூற முடியாது. காதல் அல்லது திருமண உறவு முறிந்துவிட்டால், அதைத் தொடா்ந்து குற்றவியல் வழக்குத் தொடரும் போக்கு அதிகரித்து வருவதை நீதிமன்றம் பாா்த்து வருகிறது. பாலியல் வன்கொடுமை என்பது மிகக் கடுமையான குற்றம். எனவே பாலியல் வன்முறை, கட்டாயப்படுத்துதல் போன்ற சூழலில் மட்டுமே பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை கூற வேண்டும். இருவரின் சம்மதத்துடன் நீடித்த ஒவ்வொரு உறவும் கசந்த பின்னா், அதைப் பாலியல் வன்கொடுமை என்று கூறினால், அது குற்றத்தின் தீவிரத்தைக் குறைத்துவிடும் அல்லது அது குற்றச்சாட்டையே செல்லாததாக்கிவிடும் என்று என்று நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து பாலியல் வன்கொடுமை, மோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து சந்தோஷை விடுவித்து உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை