நாட்டின் முதன்மை நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 130 ஜூனியர் கோர்ட் அட்டெண்டன்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு குறித்து... உச்ச நீதிமன்றத்தில் ஜூனியர் கோர்ட் அட்டெண்டன்ட் பணி - கோப்புப்படம் நாட்டின் முதன்மை நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 130 ஜூனியர் கோர்ட் அட்டெண்டன்ட் பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைவாய்ப்பு விளம்பர எண்.: F3/2026 - SC (RC) பணி: Junior Court Attendant காலியிடங்கள்: 130 சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100 வயது வரம்பு: 1.10.2026 தேதியின்படி 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிக்கு மத்திய அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் சலுகை வழங்கப்படும். தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அல்லது பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தகுதியானவர்களுக்கு எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வு குறித்த விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி. எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 26.12.2026. விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி ,எஸ்டி, மாற்றுத்திறனாளி, ஓபிசி மற்றும் முன்னாள் ராணுவத்தினர்களுக்கு ரூ.750. இதர பிரிவினர்களுக்கு ரூ.1,500. கட்டணத்தை யூகோ வங்கி மூலமாக ஆன்லைனில் செலுத்தவும். விண்ணப்பிக்கும் முறை: www.sci.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.11.2026 விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
உச்ச நீதிமன்றத்தில் ஜூனியர் கோர்ட் அட்டெண்டன்ட் பணி: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?