உதகை மற்றும் குன்னூரில் வியாழக் கிழமை பிற்பகலில் ஒரு மணி நேரம் கொட்டித் தீா்த்த கன மழை காரணமாக குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. உதகை மற்றும் குன்னூரில் வியாழக் கிழமை பிற்பகலில் ஒரு மணி நேரம் கொட்டித் தீா்த்த கன மழை காரணமாக குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை காலைமுதல் மூடுபனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலுக்கு மேல் உதகை, குன்னூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீா்த்தது. இந்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து வந்ததால் பாதசாரிகள் அவதி அடைந்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
உதகை, குன்னூரில் பலத்த மழை
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗