உத்தராகண்ட்டின் ஜோஷிமத் அருகே 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்து

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
உத்தராகண்ட்டின் ஜோஷிமத் அருகே 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்து

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் டேராடூன்: பத்ரிநாத்தில் இருந்து டேராடூனுக்கு விமானி உட்பட 6 பேருடன் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து, அதை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டிரான்ஸ் பாரத் ஏவியேஷன் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த ஹெலிகாப்டரை கேப்டன் ஹிமான்ஷு இயக்கியுள்ளார். இதில், பிரதாபா, அருண், சங்கர் கவுடா, சுதிர் கே, ஹெச்.எஸ்.நடராஜா ஆகிய பயணிகள் பயணித்துள்ளனர். இந்த ஹெலிகாப்டர் மார்வாரி பாலத்துக்கு அருகில் உள்ள ஜேபி பவர் ஹவுஸ் அருகே மலைச்சரிவில் மோதி விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது பத்ரிநாத் ஆலயத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்ததா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. சமோலி மாவட்ட நிர்வாகம், காவல் துறை, மாநில பேரிடர் மீட்புப் படை, ராணுவம், இந்தோ - திபெத்திய துணை ராணுவம் ஆகியவற்றின் குழுக்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. பயணிகள் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பத்ரிநாத்தில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்பட்ட இந்த ஹெலிகாப்டர் பிற்பகல் 2.20 மணி அளவில் தொடர்பை இழந்ததாக உத்தராகண்ட் சிவில் விமான போக்குவரத்து மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. கண்காணிப்பு அமைப்பாலும் ஹெலிகாப்டரை கண்டறிய முடியவில்லை என்றும், எனவே அதன் தற்போதைய இருப்பிடம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அது கூறியுள்ளது. விபத்து தொடர்பாக உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘ஜோஷிமத் அருகே உள்ள சாய் கிராமத்திற்கு அருகில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக தகவல் வந்துள்ளது. மாவட்ட நிர்வாகம், பேரிடர் மேலாண்மைத் துறை, மாநில பேரிடர் மீட்புப் படை இணைந்து கூட்டு மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. தனிப்பட்ட முறையில் நிலைமையை நான் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறேன். படுகாயமடைந்தவர்கள் சிறந்த சிகிச்சையைப் பெற உடனடியாக மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்ய நான் உத்தரவிட்டுள்ளேன். பயணிகளின் பாதுகாப்புக்காக நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை