உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணம்! இந்தியர்களுக்கு தொடரும் சோகம்! எப்போது முடியும் பிரச்சனை?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: oneindia.com (original report) ↗
உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணம்! இந்தியர்களுக்கு தொடரும் சோகம்! எப்போது முடியும் பிரச்சனை?

தெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தியில், இந்திய மாலுமிகள் பயணித்த கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தாக்குதலால் மாலுமிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. எனவே இதுபோன்ற பிரச்சனைகளுக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன. ஓமன் நாட்டின் காசாப் பகுதிக்கு வடகிழக்கில், 25 கடல் மைல் தொலைவில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், அங்கீகரிக்கப்படாத கடல் வழிகளை பயன்படுத்த முயன்ற.. 3 எண்ணெய் கப்பல்கள் வெடித்ததாக ஈரான் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இந்த சம்பவம் நடந்தது. ஹார்முஸ் ஜலசந்தியில், இருவேறு எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 29 இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்து அச்சம் எழுந்திருக்கிறது. முதல் சம்பவம் அக்.29ம் தேதி நடந்தது. சைபிரிய நாட்டு கொடியுடன் பயணித்த MT ARZANA என்கிற பிரம்மாண்ட எண்ணெய் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்துக்கொண்டிருந்தபோது ஏவுகணை போன்ற வெடிப்பொருள் கொண்டு, கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கப்பலில் 2 இந்திய மாலுமிகள் இருந்தனர். இதை தொடர்ந்து இரண்டாவது சம்பவம்,அக்.30ம் தேதி நடந்திருக்கிறது. பனாமா நாட்டு கொடியுடன், 27 இந்திய மாலுமிகளுடன் பயணித்த MT லூயிஸ் 1 கச்சா எண்ணெய் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியில், 'லிம்பெட் மைன்' எனப்படும் கப்பலின் அடிப்பகுதியில் ஒட்டவைத்து வெடிக்கப்படும் காந்த வெடிகுண்டுகளால் தாக்கப்பட்டது. இந்த தாக்குதலால் கப்பலின் எஞ்சின் அறையில் தீ விபத்து ஏற்பட்டு, கப்பல் தற்காலிகமாக செயல் இழந்தது. பின்னர் தீயணைக்கப்பட்டு, கப்பல் தனது பயணத்தை தொடர்ந்தது. கடந்த பிப்ரவரி மாதத்தில் அமெரிக்கா-ஈரான் போர் தொடங்கியதில் இருந்து, இந்த கடல் பகுதியில் கப்பல் மீது காந்த வெடிகுண்டுகளில் மூலம் நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவாகும். இந்த இரு கப்பல்களில் பயணித்த மொத்தம் 29 இந்திய மாலுமிகளுக்கு எந்தவித பெரிய ஆபத்தும் ஏற்படவில்லை. இருப்பினும் இதே போன்ற சூழல் உருவாகும் பட்சத்தில் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்று மாலுமிகள் வலியுறுத்தியுள்ளனர்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை