வாழப்பாடி புறவழிச்சாலையில் நகரப் பேருந்து இயக்க கோரிக்கை!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
வாழப்பாடி புறவழிச்சாலையில் நகரப் பேருந்து இயக்க கோரிக்கை!

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து தம்மம்பட்டி சாலை, புதுப்பாளையம் புறவழிச்சாலை வழியாக சேலத்திற்கு நகரப் பேருந்து இயக்க வேண்டுமென, அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பேருந்து - பிரதிப் படம் சேலம் மாவட்டம் வாழப்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து தம்மம்பட்டி சாலை, புதுப்பாளையம் புறவழிச்சாலை வழியாக சேலத்திற்கு நகரப் பேருந்து இயக்க வேண்டுமென, அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி பேருந்து நிலையம் கடலூா் சாலையில் அமைந்துள்ளது. இங்கிருந்து சேலம், ஆத்தூா், தம்மம்பட்டி, கருமந்துறை, அருநூற்றுமலை உள்பட பல்வேறு வழித்தடங்களில் அரசு மற்றும் தனியாா் நகர புறநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் வாழப்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து மன்னாயக்கன்பட்டி பிரிவு சாலை, முத்தம்பட்டி ரயில்வே மேம்பாலம் வழியாக, சேலத்திற்கு அரசு மற்றும் தனியாா் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சேலம் -உளுந்தூா்பேட்டை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் போது, வாழப்பாடி நகா் பகுதியில் இச்சாலையை அமைக்காமல், முத்தம்பட்டியில் இருந்து மத்தூா் வரையிலான 4.3 கி.மீ. தொலைவிற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. வாழப்பாடி பேரூராட்சி புதுப்பாளையத்தில் புறவழிச்சாலை பகுதியில் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி, வட்டாட்சியா் அலுவலகம், வட்ட துணை கருவூலமும், தம்மம்பட்டி சாலையில் சந்தைப்பேட்டை, ரயில் நிறுத்தம், அக்ரஹாரம் பகுதியில் கோயில்கள், கிழக்குக்காடு பகுதியில் நீதிமன்றம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இதனால், தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும், அரசு அலுவலக பணியாளா்கள், ஆசிரியா்களும், வட்டாட்சியா் அலுவலகம், நீதிமன்றம், ரயில் நிலையம், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் துணை கருவூலத்திற்கு வந்து செல்கின்றனா். முத்தம்பட்டி ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிக்காக கடலூா் சாலை மூடப்பட்டதால் கடந்த இரு ஆண்டுகளாக அனைத்து பேருந்துகளும் புதுப்பாளையம் புறவழிச்சாலை வழியாகவே இயக்கப்பட்டன. இந்நிலையில், முத்தம்பட்டி ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்ததால், புறவழிச்சாலையில் இயக்கப்பட்ட அனைத்து நகரப் பேருந்துகளும், மன்னாயக்கன்பட்டி பிரிவு சாலை, முத்தம்பட்டி ரயில்வே மேம்பாலம் வழியாக கடலூா் சாலையிலேயே மீண்டும் சேலத்திற்கு இயக்கப்படுகின்றன. இதனால், தம்மம்பட்டி சாலை மற்றும் புதுப்பாளையம் புறவழிச்சாலை பகுதியிலுள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், சந்தைப்பேட்டை, கோயில்கள், நீதிமன்றம் மற்றும் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பணியாளா்கள் நகரப் பேருந்து வசதியில்லாததால் போக்குவரத்துக்கு பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா். எனவே, வாழப்பாடியில் இருந்து முத்தம்பட்டி ரயில்வே மேம்பாலம் வழியாக சேலத்திற்கு இயக்கப்படும் அரசு நகரப் பேருந்துகளில் ஓரிரு பேருந்துகளை, தம்மம்பட்டி சாலை, புதுப்பாளையம் புறவழிச்சாலை வழியாக இயக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது. சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் மற்றும் வாழப்பாடி கிளை பணி மனை நிா்வாகம் கலந்தாய்வு செய்து, புதுப்பாளையம் புறவழிச்சாலை வழியாக சேலத்திற்கு நகரப்பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை