வேலூர் மத்திய சிறை துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் பெட்ரோல் பங்க், உணவகம், கோழி இறைச்சி கடைகள் மூடப்பட்டிருப்பது பற்றி.... வேலூர் மத்திய சிறை துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் பெட்ரோல் பங்க், கோழி இறைச்சி கடை. வேலூர் மத்திய சிறை துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் பெட்ரோல் பங்க், உணவகம், கோழி இறைச்சி கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் மத்திய சிறையில் சுமார் 900 க்கும் மேற்பட்ட சிறை வாசிகள் உள்ளனர். சுமார் 30 ஆண் நன்நடத்தை சிறைவாசிகளைக் கொண்டு வேலூர் மத்திய சிறை துறை சார்பில் பெட்ரோல் பங்க், கோழி இறைச்சி கடை, பட்டாசு கடை மற்றும் உணவகம் ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பணியாற்றும் நன்னடத்தைகளுக்கு மாதம் ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓடிய நிலையில் பாதுகாப்பு நடவடிக்காக வேலூர் மத்திய சிறை துறை சார்பில் செயல்பட்டு வந்த பெட்ரோல் பங்க், உணவகம் மற்றும் கோழி இறைச்சி கடைகள் தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைகளில் நன்னடத்தை சிறைவாசிகளைக் கொண்டு செயல்பட்டு வரும் கடைகளை மறு உத்தரவு வரும் வரை மூடி வைக்க தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி உத்தரவிட்டதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டதாக வேலூர் மத்திய சிறைத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வேலூரில் சிறைத்துறை உணவகம், பெட்ரோல் பங்க் திடீர் மூடல்!