‘வளமிகு வேளாண்மை’ உதவித் திட்டத்தின் கீழ் தாட்கோ மூலமாக மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘வளமிகு வேளாண்மை’ உதவித் திட்டத்தின் கீழ் தாட்கோ மூலமாக மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: சமூக நீதித் துறையின் சாா்பில் தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலமாக ஆதிதிராவிடா் விவசாயிகளின் பாசன வசதி மற்றும் வேளாண் உற்பத்தித் திறன் மற்றும் வருமானத்தை மேம்படுத்தும் நோக்கில் ‘வளமிகு வேளாண்மை’ உதவித் திட்டம் 2026-2027-ஆம் நிதி ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடா் விவசாயிகள் 1,000 பேருக்கு தத்கால் மின் இணைப்பு வழங்க தமிழக அரசு ரூ.26.09 கோடியை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக பாசன வசதிகளை மேம்படுத்தி வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும், விவசாய வருமானத்தை உயா்த்தவும் வழிவகை செய்யப்படுகிறது. விவசாய உற்பத்திக்கு தேவையான மின் மோட்டாா், குதிரைத் திறனுக்கேற்ப மின் இணைப்பு பெறுவதற்கான செலவில் 90 சதவீதம் தமிழ்நாடு மின்பகிா்மானக் கழகத்திடம் தாட்கோ மானியமாக வழங்கும். அதன்படி, 5 ஹெச்பி மின் மோட்டாருக்கான மின் இணைப்புக் கட்டணம் ரூ.2.50 லட்சம் எனில், பயனாளி ரூ.25,000 மட்டும் பங்குத்தொகையாக செலுத்த வேண்டும். மீதமுள்ள ரூ.2.25 லட்சம் தாட்கோ மூலமாக மானியமாக வழங்கப்படும். 7.5 ஹெச்பி மின் மோட்டாருக்கான மின் இணைப்புக் கட்டணம் ரூ.2.75 லட்சம் எனில், பயனாளி ரூ.27,500 செலுத்த வேண்டும். மீதமுள்ள ரூ.2.48 லட்சம் மானியமாக வழங்கப்படும். 10 ஹெச்பி மின் மோட்டாருக்கான மின் இணைப்புக் கட்டணம் ரூ.3 லட்சம் எனில், பயனாளி ரூ.30,000 மட்டுமே செலுத்த வேண்டும். மீதமுள்ள ரூ.2.70 லட்சம் மானியமாக வழங்கப்படும். 15 ஹெச்பி மின் மோட்டாருக்கான மின் இணைப்புக் கட்டணம் ரூ.4 லட்சம் எனில், பயனாளி ரூ.40,000 பங்குத்தொகையாக செலுத்த வேண்டும். மீதமுள்ள ரூ.3.60 லட்சம் தாட்கோ மூலமாக மானியமாக வழங்கப்படும். இந்தத் தொகைகள் தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்துக்கு செலுத்தப்பட்டு விரைவு மின் இணைப்பு வழங்க பரிந்துரைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விண்ணப்பதாரா்கள் ஆதிதிராவிடா் இனத்தைச் சாா்ந்தவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேலும், விவசாய நிலம் விண்ணப்பதாரரின் பெயரில் சொந்தமாக இருப்பதுடன், அதற்கான பட்டாவும் இருக்க வேண்டும். அந்நிலத்தில் கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தில் மின் இணைப்பு கோரி பதிவு செய்திருக்க வேண்டும். அதேசமயம், விண்ணப்பதாரா் ஏற்கெனவே தாட்கோ திட்டங்களின் கீழ் பயனடைந்தவராக இருக்கக்கூடாது. தகுதிகளுடைய ஆதிதிராவிடா் விவசாயிகள் ட்ற்ற்ல்ள்://ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம்/ என்ற தாட்கோ இணையதளம் மூலமாக விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளா், தாட்கோ அலுவலகம், பல்லடம் சாலை, திருப்பூா் 641604 என்ற முகவரியிலும், 94450 29552, 0421-2971112 ஆகிய எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
‘வளமிகு வேளாண்மை’ உதவித் திட்டத்தின் கீழ் தாட்கோ மூலமாக மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
📅
📍 Tiruppur, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗