'வலியில்லாத கணமே இல்லை': இருமுறை மரண ஊசி செலுத்தியும் உயிர் பிழைத்த பெண் கூறியது என்ன?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
'வலியில்லாத கணமே இல்லை': இருமுறை மரண ஊசி செலுத்தியும் உயிர் பிழைத்த பெண் கூறியது என்ன?

பட மூலாதாரம், Reuters அமெரிக்காவில் கடந்த செப்டம்பரில் மரண தண்டனையை நிறைவேற்றும் முயற்சி தோல்வியடைந்த பிறகு, கிறிஸ்டா பைக், முதல்முறையாகப் பொதுவெளியில் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். "அன்றிரவு முதல், நான் வலியில்லாமல் இருந்த ஒரு கணம் கூட இல்லை," என்று அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார். "என் உடல் வலிக்கிறது. என் கைகள் வலிக்கின்றன. என் தொண்டை வலிக்கிறது. பேசுவதற்கு நான் இன்னும் சிரமப்படுகிறேன். இந்த வலி உடல் ரீதியானது மட்டுமல்ல. என் மனதிலும் என் ஆன்மாவிலும் வலி இருக்கிறது." என்று அவர் தெரிவித்துள்ளார். 50 வயதான பைக், பென்டோபார்பிட்டால் என்ற மருந்தின் இரண்டு மரண ஊசிகளிலிருந்து உயிர் தப்பிய பிறகு, கடந்த மாத இறுதியில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த ஊசிகள் அவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆழ்த்தியிருந்தன. அதன்பிறகு, கடந்த 30 ஆண்டுகளாக அவர் அடைக்கப்பட்டிருந்த சிறைக்கே மீண்டும் அனுப்பப்பட்டுள்ளார். 1995-ஆம் ஆண்டு கொலீன் ஸ்லெம்மர் என்பவரைக் கொலை செய்ததற்காக அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது. மரண ஊசி மூலம் மரணதண்டனை நிறைவேற்றும் முயற்சியிலிருந்து உயிர் தப்பிய ஒரே நபர் பைக் தான் என்று கருதப்படுகிறது. பட மூலாதாரம், Tennessee Department of Corrections "நான் இப்போது குணமடைந்து வருகிறேன். முன்பைவிட வலிமை பெற்று வருகிறேன் என்பது எனக்குத் தெரியும். ஆனால் குணமடைவதும் நலமாக இருப்பதும் ஒன்றல்ல" என்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். மரண தண்டனையை நிறைவேற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்குப் பிறகு, அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதாகவும், கைகளில் குறிப்பிடத்தக்க அளவில் வீக்கம் இருந்ததாகவும், அவரால் உணவைக்கூட விழுங்க முடியவில்லை என்றும் அவரது வழக்கறிஞர்கள் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர். End of அதிகம் படிக்கப்பட்டது பைக் தனது முன்னாள் காதலர் டடாரில் ஷிப்புடன் இணைந்து, 19 வயதான ஸ்லெம்மரைத் தாக்கி, சித்ரவதை செய்து கொலை செய்தபோது அவருக்கு 18 வயது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்காக நடத்தப்பட்ட வேலைவாய்ப்புப் பயிற்சி முகாமில் அவர்கள் ஸ்லெம்மரைச் சந்தித்திருந்தனர். குற்றம் நடந்தபோது டடாரில் ஷிப் சட்டப்படி வயது வந்தவராக இல்லாததால், அவருக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அவர் இன்னும் சிறையில் இருக்கிறார். பட மூலாதாரம், Family handout பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு கடந்த மாதம் பைக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது உலகம் முழுவதும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் பைக்கையும் அதிர்ச்சியடையச் செய்தது. "அந்த இரவுக்குப் பிறகு வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை," என்று அவர் தனது அறிக்கையில் கூறினார். "பலரை இந்த மோசமான நிலைக்குத் தள்ளிய நிர்வாகத்தின் திறமையின்மையால் நான் மிகுந்த வேதனையடைந்துள்ளேன்" என்றும் அவர் கூறியுள்ளார். மரண தண்டனையை நிறைவேற்றும் முயற்சி திட்டமிட்டபடி ஏன் நிறைவேறவில்லை என்பது குறித்து டென்னஸிசீர்திருத்தத்துறை இதுவரை விளக்கமளிக்கவில்லை. இருப்பினும், பயன்படுத்தப்பட்ட மரண தண்டனை முறையை அந்தத் துறை நியாயப்படுத்தியுள்ளது. பிபிசி தொடர்பு கொண்டபோது, ​​பைக்கின் அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க அது மறுத்துவிட்டது. டென்னஸி ஆளுநர் பில் லீ, இந்த ஆண்டு இறுதிவரை எஞ்சியுள்ள அனைத்து மரண தண்டனை நிறைவேற்றங்களையும் நிறுத்தி வைத்துள்ளார். மேலும், "உண்மையில் என்ன நடந்தது என்பதைத் துல்லியமாகக் கண்டறிய" சுதந்திரமான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். பைக்கிற்கு மீண்டும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்பு குறித்து இந்த வாரம் செய்தியாளர்கள் கேட்டபோது, "நீதிமன்றங்கள் வேறுவிதமாகத் தீர்மானிக்காதவரை, அவருக்கான தண்டனை முன்பு இருந்ததைப் போலவே இருக்கும் என்று நான் கருதுகிறேன்" என லீ பதிலளித்தார். கடந்த 200 ஆண்டு வரலாற்றில் டென்னஸி மாகாணத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்த முதல் பெண் பைக் ஆவார். அவரது வழக்கறிஞர்கள் பல தசாப்தங்களாக அவரது வழக்கில் மேல்முறையீடு செய்து வருகின்றனர். அவரது மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முந்தைய நாட்களில், அமெரிக்க உச்ச நீதிமன்றமும் லீயும் அந்தத் தண்டனையைத் தடுத்து நிறுத்த மறுத்துவிட்டனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை