வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்... வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது . தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ள நிலையில், அடுத்த 6 மணி நேரத்தில் (இன்று) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் (நாளை) புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த புயலானது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நவ. 2 ஆம் தேதி மாலை ஆந்திரம் அருகே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறும் பட்சத்தில் இந்தியா பரிந்துரைத்த 'முரசு' என பெயரிடப்படும். 2026 ஆம் ஆண்டில் வங்கக்கடலில் உருவாகும் 2 ஆவது புயல் இதுவாகும். இதனால் தமிழகத்தில் நவ. 2 ஆம் தேதி பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான ஒர்னாப் புயல் ஆந்திர மாநிலம் நர்சாபூர் - காக்கிநாடா இடையே உள்ள ஏனாம் அருகே அதி தீவிர புயலாக புதன்கிழமை கரையைக் கடந்தது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER
வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது 'முரசு' புயல்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗