வங்​கக் கடலில் தீவிர புயலாக வலுப்பெறும் ‘முரசு' - இன்று நள்ளிரவில் ஆந்திராவில் கரையை கடக்கும்

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
வங்​கக் கடலில் தீவிர புயலாக வலுப்பெறும் ‘முரசு' - இன்று நள்ளிரவில் ஆந்திராவில் கரையை கடக்கும்

சென்னை: வங்​கக் கடலில் நிலை கொண்​டுள்ள ‘முரசு’ புயல், தீவிர புய​லாக வலுப்​பெற்று இன்று நள்​ளிர​வில் ஆந்​திர கடலோரப் பகுதி​யில் கரையை கடக்​கும். அப்​போது அதி​கபட்​ச​மாக மணிக்கு 120 கி.மீ. வேகத்​தில் பலத்த சூறாவளிக்​காற்று வீசக்​கூடும். இதன் காரண​மாக சென்னை, திரு​வள்​ளூர் மாவட்​டங்​களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது. இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: தென்​கிழக்கு வங்​கக்​கடல் மற்​றும் அதனை ஒட்​டிய அந்​த​மான் நிகோபார் தீவு​கள் மற்​றும் அந்​த​மான் கடல் பகுதி​களில் நில​விய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்​றழுத்த தாழ்வு மண்​டலமாக வலுப்​பெற்​றது. இது பின்​னர் மேலும் வலு​வடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று புய​லாக மாறியது. இந்த புயலுக்கு முரசு என்று பெயரிடப்​பட்​டுள்​ளது. இது மேலும் வலுப்​பெற்று தீவிர புய​லாக மாறக்கூடும். மேற்கு அல்​லது வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்​திரப் பிரதேச கடலோரப் பகுதி​களுக்கு அரு​கில் நெல்​லூர் மற்​றும் நரசாப்​பூர் இடையே இன்று நள்​ளிரவு அல்​லது நாளை அதி​காலை கரையை கடக்​கக்​கூடும். இதன் காரண​மாக தமிழகத்​தில் இன்று (நவ.2) சென்னை மற்​றும் திரு​வள்​ளூர் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னல் மற்​றும் பலத்த காற்​றுடன் (மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்​தில்) கூடிய கன முதல் மிக கனமழை பெய்​யக்​கூடும். செங்​கல்​பட்டு, காஞ்​சிபுரம், ராணிப்​பேட்டை, வேலூர் மற்​றும் நீல​கிரி மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னல் மற்​றும் பலத்த காற்​றுடன் கூடிய கனமழை பெய்​யக்​கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள், வட தமிழகத்​தில் ஒருசில இடங்​களி​லும், புதுச்​சேரி​யிலும் இடி, மின்​னல் மற்​றும் பலத்த காற்​றுடன் கூடிய லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். இதர தமிழகத்​தில் ஒருசில இடங்​களில் லேசான மழை பெய்​யக்​கூடும். 3-ம் தேதி நீல​கிரி மாவட்​டத்​தில் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னல் மற்​றும் பலத்த காற்​றுடன் கூடிய கனமழை பெய்​யக்​கூடும். சென்னை மற்​றும் புறநகர் பகுதி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஒருசில பகுதி​களில் இடி, மின்​னலுடன் கூடிய கன அல்​லது மிக கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது. இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது. ‘முரசு’ புயல் பெயர் காரணம்: உலக வானிலை நிறு​வன அறி​வுறுத்​தல்​படி, வங்​கக்​கடல் மற்​றும் அரபிக்​கடல் பகுதி​களில் உரு​வாகும் புயல்​களுக்கு பெயர் வைப்​ப​தற்​காக இந்​தியா உள்​ளிட்ட 13 நாடுகள் கடந்த 2020-ம் ஆண்டு ஏராளமான பெயர்​களை பரிந்​துரை செய்​திருந்​தன. அதன்படி புயல்​களுக்கு பெயரிடப்​பட்டு வரு​கின்​றன. இதில் இந்​திய வானிலை மையம் பரிந்​துரை பெய்த தமிழ் பெயர் ‘முரசு’, தற்​போது வங்​கக்​கடலில் உரு​வாகி​யுள்ளபுயலுக்கு சூட்​டப்​பட்​டுள்​ளது. இப்​பெயரை, 2020-ம் ஆண்டு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்​குநராக இருந்த நா.புவியரசன் இந்​திய வானிலை ஆய்வு மையத்​துக்கு பரிந்​துரை செய்​தது குறிப்​பிடத்​தக்​கது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை