பட மூலாதாரம், IMD வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று, மீண்டும் ஒரு புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கைப்படி, தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிக்கோபார் தீவுகள், அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய வலுவான குறைந்த காற்றழுத்தப் பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (அக்டோபர் 31) காலை 11.30 மணியளவில் அதே பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 1,140 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள இது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த 12 மணி நேரத்தில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. நவம்பர் 2ஆம் தேதி மாலை ஆந்திரப் பிரதேசக் கடற்கரைக்கு அருகே மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல்களுக்கு பெயர் வைக்கும் முறைப்படி, இந்தப் புயல் உருவாகும் பட்சத்தில் இந்தியா பரிந்துரைத்த 'முரசு' என்ற பெயர் சூட்டப்படும். இதற்கு முந்தைய புயலுக்கு வங்கதேசம் பரிந்துரைத்த 'அர்னாப்' என்ற பெயர் சூட்டப்பட்டது. பட மூலாதாரம், Getty Images ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகள்: பட மூலாதாரம், Getty Images வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் காற்றுக்கான சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. End of அதிகம் படிக்கப்பட்டது நவம்பர் 1 மாலை முதல், வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசத் தொடங்கும். நவம்பர் 2 காலை முதல் நவம்பர் 3 காலை வரை, காற்றின் வேகம் அதிகரித்து, மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்திலும், சில நேரங்களில் 75 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும். நவம்பர் 3 மாலை முதல் நவம்பர் 4 காலை வரை, காற்றின் தீவிரம் படிப்படியாகக் குறைந்து, மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். பட மூலாதாரம், Getty Images நவம்பர் 1ஆம் தேதி காலை முதல் நவம்பர் 4ஆம் தேதி காலை வரை வட தமிழகம் - புதுச்சேரி கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் கடல் மிகக் கடுமையான சீற்றத்துடன் காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் வரவிருக்கும் இந்தப் புயலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் நவம்பர் 1 முதல் 4ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும். குறிப்பாக, நவம்பர் 2ஆம் தேதி சில இடங்களில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். நவம்பர் 2ஆம் தேதி மாலை முதல் நவம்பர் 3ஆம் தேதி காலை வரை காற்றின் வேகம் உச்சத்தை எட்டும். அப்போது மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்திலும், இடையிடையே அதிகபட்சமாக 100 கி.மீ. வேகத்திலும் கடுமையான சூறாவளிக் காற்று வீசும். கடலில் ராட்சத அலைகளுடன் மிகக் கடுமையான சீற்றம் காணப்படும் என்பதால், நவம்பர் 2 காலை முதல் நவம்பர் 4 பிற்பகல் வரை ஆந்திர கடலோரப் பகுதி மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை மையம் கடுமையாக எச்சரித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு
வங்கக்கடலில் மீண்டும் ஒரு புயல் உருவாகிறது: எங்கு நோக்கி நகர்கிறது? தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை