பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நாள் குறித்து... பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் - 'வீ த லீடர்ஸ்' (இது நம்ம இயக்கம்) அமைப்பின் நிறுவனர் கே. அண்ணாமலை தேவர் பெருமகனாரின் வாழ்க்கை வருங்காலத் தலைமுறையினருக்கு என்றும் வழிகாட்டியாக இருக்கும் என 'வீ த லீடர்ஸ்' (இது நம்ம இயக்கம்) அமைப்பின் நிறுவனர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் 'எக்ஸ்' பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது: ஆன்மீகமும், தேசிய உணர்வும் சமூகப் பற்றும் ஒருங்கே கொண்ட தெய்வத் திருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை நாள் இன்று. சுதந்திரப் போராட்ட வீரராகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த மக்கள் தலைவராகவும் விளங்கியவர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். தன்னலமற்ற பொதுவாழ்வு, அஞ்சாத நெஞ்சம், உறுதியான கொள்கைப்பற்று, தெய்வ பக்தி ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்த தேவர் பெருமகனாரின் வாழ்க்கை வருங்காலத் தலைமுறையினருக்கு என்றும் வழிகாட்டியாக இருக்கும் என கூறியுள்ளார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வருங்காலத் தலைமுறையினருக்கு என்றும் வழிகாட்டியாக இருப்பவர் முத்துராமலிங்கத் தேவர்: அண்ணாமலை புகழாரம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗