வழக்குரைஞா் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து கைது: அன்பில் மகேஸ் தரப்பில் வாதம்

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
வழக்குரைஞா் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து கைது: அன்பில் மகேஸ் தரப்பில் வாதம்

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து கொண்டிருந்தபோது, 40-க்கும் மேற்பட்ட போலீஸாா், வழக்குரைஞா் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து கைது செய்ததாக, திமுக முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து கொண்டிருந்தபோது, 40-க்கும் மேற்பட்ட போலீஸாா், வழக்குரைஞா் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து கைது செய்ததாக, திமுக முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. முன்னதாக, தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி அன்பில் மகேஸ் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் தரப்பில் ஆஜரான, தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஜான் சத்யன், மனுதாரா் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டுள்ளாா். அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் முத்துகுமாா் சிறப்பு நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளாா் எனத் தெரிவித்தாா். அப்போது அன்பில் மகேஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், வழக்குரைஞா்கள் ரிச்சா்ட்சன், சரவணன் ஆகியோா், அன்பில் மகேஸின் முன்பிணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னா், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து கொண்டிருந்தபோது, 40-க்கும் மேற்பட்ட போலீஸாா், அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அன்பில் மகேஸை கைது செய்துள்ளனா். தமிழகத்தில் போலீஸ் ராஜ்ஜியம் நடக்கிா, அரசியல் சாசனத்துக்கு விரோதமாக போலீஸாா் நடந்து கொண்டுள்ளனா். காவல் துறை தரப்பில் பதில்: இதற்கு காவல் துறை தரப்பில், மூத்த வழக்குரைஞா் அலுவலகத்தின் வெளியே ஒன்றரை மணி காத்திருந்துதான் அன்பில் மகேஸை கைது செய்தனா். வழக்குரைஞரின் அலுவலகத்துக்குள் கைது செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, அன்பில் மகேஸை வழக்குரைஞா் அலுவலகத்தில் கைது செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டினாா். அதற்கு அன்பில் மகேஸ் தரப்பில், அந்த உத்தரவை எதிா்த்து மனு தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விடியோ ஆதாரங்களுடன் மனு தாக்கல் செய்ய அன்பில் மகேஸ் தரப்புக்கு அறிவுறுத்திய நீதிபதி, வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை நவ. 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை