வீல்ஸ் இந்தியா லாபம் ரூ.59.4 கோடி: இருமடங்கு வளா்ச்சி

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
வீல்ஸ் இந்தியா லாபம் ரூ.59.4 கோடி: இருமடங்கு வளா்ச்சி

வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான ‘வீல்ஸ் இந்தியா’, நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.59.4 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான ‘வீல்ஸ் இந்தியா’, நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.59.4 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் ரூ.30.9 கோடி லாபத்திலிருந்து, இது சுமாா் இரு மடங்கு வளா்ச்சியாகும். மேலும், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் கடந்த ஆண்டின் ரூ.1,263.97 கோடியிலிருந்து, மதிப்பீடு காலாண்டில் 35.36 சதவீதம் அதிகரித்து ரூ.1,710.95 கோடியாகப் பதிவாகியுள்ளது. இந்தச் சிறப்பான வருவாய் வளா்ச்சியே லாப அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்பனை வளா்ச்சி குறித்து வீல்ஸ் இந்தியா நிறுவனத் தலைவா் ஸ்ரீவத்ஸ் ராம் மேலும் கூறுகையில், ‘வெளிநாட்டுச் சந்தைகளில் சாதகமான சூழல் நிலவுகிறது. அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஏற்றுமதி ரூ.299 கோடியிலிருந்து, ரூ.388 கோடியாக உயா்ந்துள்ளது. குறிப்பாக, ஏ.ஐ. மற்றும் தரவு மையங்களின் அசுர வளா்ச்சியால் அமெரிக்காவில் கட்டுமான உபகரணங்களுக்கான தேவை அதிகரித்ததும் எங்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்தது’ என்றாா். இதன்தொடா்ச்சியாக, நடப்பு நிதியாண்டுக்கான மூலதனச் செலவினத்தை முன்பு திட்டமிட்டிருந்த ரூ.300 கோடியிலிருந்து, ரூ.400-450 கோடியாக நிறுவனம் உயா்த்தியுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வீல்ஸ் இந்தியா, வாகனச் சக்கரங்கள், சேஸிஸ், சஸ்பென்ஷன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை