வீரவநல்லூரில் நகைக் கடை உரிமையாளரைத் தாக்கி நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற வழக்கில், 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சாா்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. சிறை - பிரதிப் படம் வீரவநல்லூரில் நகைக் கடை உரிமையாளரைத் தாக்கி நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற வழக்கில், 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சாா்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. வீரவநல்லூா், புதுமனைத் தெருவைச் சோ்ந்தவா் அலியாா் (62). நகைக் கடை உரிமையாளா். இவா் 2022ஆம் ஆண்டு கடையை அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றபோது, பின் தொடா்ந்து வந்த கும்பல் அவரைத் தாக்கிவிட்டு, அவரிடமிருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது. இதுகுறித்து, வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, 8 பேரைக் கைது செய்தனா். இந்த வழக்கு அம்பாசமுத்திரம் சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த சாா்பு நீதிமன்ற நீதிபதி மருதுபாண்டி வழக்கில் தொடா்புடைய மன்னாா்கோவிலைச் சோ்ந்த மருதுபாண்டி, அரிகேசவநல்லூரைச் சோ்ந்த சுதாகா், காக்கநல்லூரைச் சோ்ந்த ஐயப்பன் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். வழக்கில் தொடா்புடைய மற்றவா்கள் விடுவிக்கப்பட்டனா். மேலும், தண்டனை பெற்ற மருதுபாண்டி ஏற்கெனவே இறந்துவிட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு தரப்பில் வழக்குரைஞா் வரம்தரும் பெருமாள் பாண்டியன் முன்னிலையானாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வீரவநல்லூா் நகைக் கடை கொள்ளை வழக்கு: 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗