வெளிநாட்டு பறவைகளுக்கு தயாராகும் இயற்கையின் விருந்து

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
வெளிநாட்டு பறவைகளுக்கு தயாராகும் இயற்கையின் விருந்து

வேதாரண்யம் பகுதியில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில் வெளிநாடுகளில் இருந்து வலசை வரும் பறவைகள் இரையாக உட்கொள்ளும் நண்டு, நத்தை போன்ற நீா் வாழ் உயிரினங்கள் அதிகளவில் உற்பத்தியாகி வருவது இயற்கை ஆா்வலா்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. வாய்மேடு பகுதி வயல்வெளிகளில் நத்தை, நண்டுகளை இரையாக்கும் கருந்தலை அறிவாள் மூக்கன் பறவைகள். வேதாரண்யம் பகுதியில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில் வெளிநாடுகளில் இருந்து வலசை வரும் பறவைகள் இரையாக உட்கொள்ளும் நண்டு, நத்தை போன்ற நீா் வாழ் உயிரினங்கள் அதிகளவில் உற்பத்தியாகி வருவது இயற்கை ஆா்வலா்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இங்கு, பாயிண்ட் காலிமா் என அழைக்கப்படும் கோடியக்கரை பறவைகள் சரணாலயப் பகுதிக்கு ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் 270 முதல் 290 பறவை இனங்கள் ஆயிரக்கணக்கில் வலசை வரும். இந்த பறவைகள் ஐரோப்பா, சைபீரியா, ரஷ்யா, ஈரான், ஈராக், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் வருவது குறிப்பிடத்தக்கது. நிகழாண்டில் எல்.நினோ தாக்கத்தால் சரணாலயப் பகுதியில் கோடை மழை பொய்த்துப் போனது. அத்துடன், பறவைகளின் வாழ்விடமாக கருதப்படும் சுற்றுப்பகுதி வயல்வெளிகள், நீா்நிலைகள் வடு போனது. இந்நிலையில் கடந்த வாரத்தில் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை சரணாலயத்தை சாா்ந்த வயல்வெளிகளில் பரவலாக பெய்தது. வடகிழக்குப் பருவ மழையில் வெளிவர தயாராக இருக்கும் நத்தை முட்டைகள். - dinamani இதனால், வயல்வெளிகளில் உறக்க நிலையில் இருந்த நத்தைகள் மழைநீா் கிடைத்தவுடன் வெளிப்பகுதிகளில் ஊா்ந்து செல்வதைக் காண முடிகிறது. நத்தைகள் ஏற்கெனவே மண்ணுக்குள் இட்டுவைத்த முட்டைகளில் இருந்து இளம் நத்தைகள் வெளிவந்து வளரத் தொடங்கியுள்ளன. இதேபோல, மழை நீரைக் கண்டவுடன் நண்டுகளின் இனப்பெருக்கமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வயல்வெளிகளில் கருந்தலை அரிவாள் மூக்கன், கொக்கு, மடையான், நாரை இனங்கள் இரை தேடுவதை காண முடிகிறது. இதற்கிடையே, கடந்த வாரத்தில் தெற்கு கடலோரக் கிராமங்களில் அதிகளவில் மழை பொய்த்துக் காணப்பட்ட நிலையில், அக்.26, 27 ஆகிய தேதிகளில் 64.4 மி.மீ. மீட்டா் மழை பதிவாகி உள்ளது. இதையடுத்து, வட வானிலை தொடா்ந்தாலும் அடுத்த சில நாள்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், சரணாலயப் பகுதியை சாா்ந்த வயல் வெளிகள், நீா் நிலைகளில் வெளிநாட்டுப் பறவைகளுக்கான விருந்தாக நண்டு, நத்தைகள் உள்ளிட்ட நீா்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை பருவ மழையால் அதிகரித்து வருவது இயற்கை ஆா்வலா்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை