வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு விற்பனை திட்டத்தை சென்னையில் அமைச்சர் காந்தி ராஜ் தொடக்கிவைத்தது பற்றி.. வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு திட்டம் தொடக்கம் - X ரூ. 100 -க்கு 10 காய்கறிகள் அடங்கிய ‘வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு’ விற்பனை திட்டத்தை சென்னையில் அமைச்சர் காந்தி ராஜ் இன்று (நவ. 5) தொடக்கிவைத்தார். தீபாவளி திருநாளைப் பொதுமக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அன்றாடச் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நுகர்வோருக்கு நியாயமான விலையில் கிடைக்கச் செய்யும் நோக்கில், 10 வகையான காய்கறிகள் அடங்கிய ‘வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு’ ஒன்று ரூ.100 என்ற சலுகை விலையில், கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகள் மற்றும் கூட்டுறவுப் பண்டக சாலைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட 218 விற்பனை நிலையங்கள் மற்றும் 4 நடமாடும் காய்கறி கடைகள் (சென்னையில் மட்டும்) விற்பனை செய்யப்படவுள்ளது. பெரிய வெங்காயம் (500 கிராம்), தக்காளி (500 கிராம்), கத்தரிக்காய் (250 கிராம்), உருளைக்கிழங்கு (250 கிராம்), கேரட் (200 கிராம்), பீன்ஸ் (200 கிராம்), பச்சை மிளகாய் (100 கிராம்), எலுமிச்சை (100 கிராம்), இஞ்சி (50 கிராம்), தேங்காய் (400-450 கிராம்) ஆகியவை இந்தத் தொகுப்பில் அடங்கும். இந்த வெற்றி சிறப்புக் காய்கறி தொகுப்பு, இன்று (நவ. 5) முதல் நவ. 7-ஆம் தேதி வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நபருக்கு ஒரு தொகுப்பு மட்டுமே விற்பனை செய்யப்படும். இந்நிலையில் சென்னையில் ‘வெற்றி காய்கறி தொகுப்பு திட்ட'த்தை கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் தொடக்கிவைத்தார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு திட்டம்: சென்னையில் அமைச்சர் தொடக்கி வைத்தார்!
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗