வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது NVS-03 செயற்கைக்கோள்: இஸ்ரோ

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Business ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது NVS-03 செயற்கைக்கோள்: இஸ்ரோ

வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டா: அடுத்த தலைமுறை வழிகாட்டு செயற்கைக்கோளான NVS-03, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து GSLV ராக்கெட் மூலம் வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து GSLV-F18 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட 2,250 கிலோ எடை கொண்ட அடுத்த தலைமுறை வழிகாட்டு செயற்கைக்கோளான NVS-03, திட்டமிடப்பட்ட புவிநிலை பரிமாற்ற சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் வி. நாராயணன், “GSLV-F18 ராக்கெட், 2,250 கிலோ எடை கொண்ட NVS-03 செயற்கைக்கோளை திட்டமிடப்பட்ட நீள்வட்டப் பாதையில் மிகத் துல்லியமாக நிலைநிறுத்தியுள்ளது. இந்த சிறப்பான சாதனையை நிகழ்த்திய இஸ்ரோவின் அனைத்து குழு உறுப்பினர்களுக்கும், தொழில்துறை பங்குதாரர்களுக்கும், கல்வியாளர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். ராக்கெட்டின் அனைத்து அமைப்புகளும் எதிர்பார்த்தபடியே சிறப்பாகச் செயல்பட்டன. NVS-03 என்ற இந்த செயற்கைக்கோள் அடுத்த தலைமுறை வழிகாட்டு செயற்கைக்கோள் அமைப்பின் மூன்றாவது செயற்கைக்கோள் ஆகும். இது இந்திய பிராந்திய வழிகாட்டு செயற்கைக்கோள் அமைப்பு (IRNSS) அல்லது நேவிகேஷன் வித் இந்தியன் கான்ஸ்டலேஷன் (NavIC) மூலம் வழங்கப்படும் வழிகாட்டு சேவைகள் தடையின்றி தொடர்வதை உறுதி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் ஏற்கனவே உள்ள L5 மற்றும் S அலைவரிசை சமிக்ஞைகளுடன், L1 சமிக்ஞையையும் கொண்டுள்ளது. இது இந்திய நிலப்பரப்பு மற்றும் இந்திய எல்லைகளில் இரந்து சுமார் 1,500 கி.மீ. சுற்றளவு கொண்ட பிராந்தியம் வரை தனது சேவையை வழங்கும். நேவிக் (NavIC) என்பது இந்தியாவின் சுதந்திரமான வழிகாட்டு செயற்கைக்கோள் அமைப்பாகும். இது இந்தியாவிலும், இந்திய நிலப்பரப்பில் இருந்து சுமார் 1,500 கி.மீ. தொலைவு வரையிலான பிராந்தியத்திலும் உள்ள பயனர்களுக்கு துல்லியமான இருப்பிடம், வழிகாட்டுதல் மற்றும் நேரத்தை கண்டறியும் (PNT - Position, Navigation, and Timing) சேவைகளை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. 12 ஆண்டுகள் பணி ஆயுட்காலம் கொண்ட NVS-03 செயற்கைக்கோள், நேவிக் செயற்கைக்கோள் தொகுப்பின் செயல்பாட்டை மீண்டும் சீரமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முந்தைய செயற்கைக்கோளான NVS-02ஐ, அதன் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த இஸ்ரோ தவறியதால் நேவிக் தொகுப்பின் செயல்பாடு பலவீனமடைந்திருந்தது. தற்போதைய NVS-03 செயற்கைக்கொளின் வெற்றியின் மூலம் நான்கு செயற்கைக்கோள்களைக் கொண்ட நேவிக் தொகுப்பு அதன் குறைந்தபட்ச செயல்பாட்டு நிலைக்கு திரும்பியுள்ளது. ஏற்கனவே மூன்று செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த செயற்கைக்கோளுடன் சேர்த்து மொத்தம் நான்கு செயற்கைக்கோள்கள் மூலம் நாட்டின் PNT சேவைகளை தன்னிச்சையாகப் பெற வழிவகை செய்கிறது. இது ரயில்களை நிகழ்நேரத்தில் கண்காணிக்கவும், வாகனங்கள் மற்றும் கப்பல்களை நிகழ்நேரத்தில் கண்காணிக்கவும் பயன்படுகிறது. இது ஒரே நாடு ஒரே நேரம் திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.” என தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து NVS-03 செயற்கைக்கோள் திட்டமிட்ட அதன் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்த திட்டம் நமது உள்நாட்டு செயற்கைக்கொள் வழிகாட்டுதல் அமைப்பான நேவிக்கை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். நமது விண்வெளி விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பும் புத்திசாலித்தனமும் தொடர்ந்து நம் நாட்டுக்கு பெருமை சேர்க்கின்றன.” என தெரிவித்துள்ளார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை