வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி எஃப் 18 - புகைப்படங்கள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி - எஃப் 18 ராக்கெட் இரவு (30ஆம் தேதி) 11.51 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் ஏவுதலுக்கான 24 மணி நேரக்கவுன்டவுன் 29 ஆம் தேதி தொடங்கி, நேற்று இரவு 11.51 மணிக்கு வெற்றிகரமாக ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. புவி வட்டப்பாதையில் என்விஎஸ் 03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. சுமார் 50 மீட்டர் உயரம் கொண்ட என்விஎஸ்-03 செயற்கைகோள் 2,250 கிலோ எடை கொண்டது. இந்திய நிலப்பரப்பு மற்றும் எல்லைகளைக் கடந்து சுமார் 1,500 கி.மீ. பரப்பளவுக்குத் துல்லியமான வழிகாட்டி மேப்பிங் சேவைகளை இது வழங்கும். தரை, கடல் மற்றும் வான்வெளிப் போக்குவரத்தைக் கண்காணிக்கவும், பேரிடர் காலங்களில் துல்லியமான எச்சரிக்கைத் தகவல்களை வழங்கவும் இந்தச் செயற்கைக்கோள் உதவும். இருப்பிட மற்றும் வழிகாட்டும் சேவைக்கு உதவும் நேவிக் அமைப்பை வலுப்படுத்தி குறைபாடுகளை களையும் நோக்கில் என்விஎஸ்-03 செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. செய்தியாளர் சந்திப்பில் இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் மற்ற அதிகாரிகள். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி எஃப் 18 - புகைப்படங்கள்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Business
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗