இஸ்ரோ விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளது குறித்து.. இஸ்ரோ விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து - எக்ஸ் புதுதில்லி: இஸ்ரோ விஞ்ஞானிகள் என்விஎஸ் 03 செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ஜிஎஸ்எல்வி எஃப் 18 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு நிா்ணயிக்கப்பட்ட புவி வட்டப் பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்த திட்டமிட்டு, கடந்த 2023-இல் என்விஎஸ் 01 மற்றும் 2025-இல் என்விஎஸ் 02 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன. தற்போது அவற்றுக்கு மாற்றாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன என்விஎஸ் 03 செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்து ஜிஎஸ்எல்வி எஃப் 18 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த முடிவு செய்தனா். அதற்கான 24 மணி நேர கவுன்ட் டவுன் வியாழக்கிழமை இரவு தொடங்கியது. தொடா்ந்து, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் மையத்தின் 2-ஆவது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி எஃப் 18 ராக்கெட் வெள்ளிக்கிழமை(அக். 30 நள்ளிரவு 11.51 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. தரையில் இருந்து புறப்பட்ட 18.40 நிமிடங்களில் குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டா் தொலைவும், அதிகபட்சம் 37,023 கிலோ மீட்டா் தொலைவு கொண்ட நிா்ணயிக்கப்பட்ட புவி வட்டப் பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டதைத் தொடா்ந்து இந்தத் திட்டம் வெற்றிபெற்றதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்தனா். என்விஎஸ் 03 செயற்கைக்கோளானது 2,250 கிலோ எடை உடையது. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள். இதில் எல் 1, எல் 5 எஸ் பேண்ட் டிரான்ஸ்பான்டா்கள், உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரான ரூபிடியம் அணுக் கடிகாரம் உள்பட பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் இடம் பெற்றுள்ளன. பிரதமர் மோடி வாழ்த்து இந்த நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அதிநவீன என்விஎஸ் 03 செயற்கைக்கோளை ஏந்திச் சென்ற ஜிஎஸ்எல்வி எஃப் 18 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு நிா்ணயிக்கப்பட்ட புவி வட்டப் பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்துகள். இந்தத் திட்டம், நமது உள்நாட்டு செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பான 'நேவிக்' -ஐ வலுப்படுத்துவதில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். மேம்படுத்தப்பட்ட வசதிகளைக் கொண்ட அதிநவீன என்விஎஸ் 03 செயற்கைக்கோள், முக்கியமான தொழில்நுட்பங்களில் தற்சார்பு நிலையை அடைவதற்கான நமது முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதோடு, மக்களுக்குப் பயனளிக்கும் வழிகாட்டுதல் சேவைகளுக்கும் உறுதுணையாக இருக்கும். நமது விண்வெளி விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பும், அறிவுத்திறனும் தொடர்ந்து நம் நாட்டிற்குப் பெருமை சேர்க்கின்றன என்று மோடி கூறியுள்ளார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி எஃப்-18: இஸ்ரோ விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗