வெட்கமில்லையா? பாக். அசீம் முனீருக்கு சொந்தமில்லை.. ராணுவ அமைச்சரவை சபையிலேயே வெளுத்துவிட்ட எம்பி!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: oneindia.com (original report) ↗
வெட்கமில்லையா? பாக். அசீம் முனீருக்கு சொந்தமில்லை.. ராணுவ அமைச்சரவை சபையிலேயே வெளுத்துவிட்ட எம்பி!

இஸ்லாமாபாத்: ''ஒரு ராணுவ அமைச்சராக இருந்துகிட்டு ஈரானில் நடக்கும் அமைதி பேச்சுவார்த்தைக்கு செல்லாமல் இங்கே இருக்கிறீர்கள். கொஞ்சமாவது வெட்கம், கண்ணியம் இருக்கட்டும் பாகிஸ்தான் எந்த ஜெனரலுக்கும் சொந்தமானது இல்லை. அது இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொருவருக்கும் சொந்தமானது'' என்று பாகிஸ்தானின் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப்பை, அந்த நாட்டின் நாடாளுமன்றத்திலேயே வைத்து எம்பி ஒருவர் விளாசினார். பாகிஸ்தான் ராணுவ அமைச்சராக கவாஜா ஆசிப் உள்ளார். இவர் ராணுவ அமைச்சராக இருந்தாலும் கூட எல்லா முடிவுகளையும் ராணுவ தளபதி அசீம் முனீர் தான் எடுப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப்பை, அந்த நாட்டின் எம்பி நாடாளுமன்றத்தில் கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஜமியத் உலமா-இ-இஸ்லாம்-ஃபஸ்ல் (JUI-F) தலைவரும், மவுலானாவுமான, எம்பி ஃபஸ்லூர் ரஹ்மான் பேசியதாவது: ''துறை சார்ந்த அமைச்சர்கள் முறையாக செயல்பாட்டு பாகிஸ்தானின் மாண்பை காப்பாற்ற வேண்டும். பாகிஸ்தான் எந்த ஜெனரலுக்கும் (அசீம் முனீரை மறைமுகமாக குறிக்கும் வகையில் கூறினார்) சொந்தமானது அல்ல. அது இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. கவாஜா ஆசிப் இங்கே இருக்கிறார். ஆனால் ஈரானில் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் செய்யப்படுகிறது. அங்கு ஒப்பந்தம் நடக்கும்போது நம் நாட்டின் ராணுவ அமைச்சர் இங்கு இருக்கிறார். கொஞ்சம் வெட்கம், கொஞ்சம் கண்ணியம் இருக்கட்டும்'' என்று கூறினார். இதை கேட்டவுடன் எதிர்க்கட்சியினர் சிரித்தனர். ஏனென்றால் கவாஜா ஆசிப் எதிர்க்கட்சியாக இருந்தபோது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் பிரதமரான இம்ரான் கான் தரப்பை அடிக்கடி விமர்சனம் செய்து வந்தார். அப்போது கவாஜா ஆசிப் பேசும்போது, ''கொஞ்சம் வெட்கம், கொஞ்சம் கண்ணியம் இருக்க வேண்டும்'' என்று அடிக்கடி விமர்சனம் செய்தார். தற்போது அந்த வார்த்தையை பயன்படுத்தியே கவாஜா ஆசிஃப்பை எம்பி ஃபஸ்லூர் ரஹ்மான் விமர்சானம் செய்துள்ளார். ஏமலும் இந்த விமர்சனத்தின் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. சவுதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட நாடுகள் 'மெக்கா' ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி ஹவுதிகளின் தாக்குதலில் இருந்து சவுதி அரேபியாவை பாதுகாக்க பாகிஸ்தான் தனது ராணுவ வீரர்களை அங்கு அனுப்பியது. அதேபோல் துருக்கியும் சவுதி அரேபியாவிற்கு ராணுவ உதவிகளை வழங்கியது. இது பலன் அளிக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி ஹவுதிகளின் தாக்குதலை நிறுத்தும்படி ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான், வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ஸி மற்றும் அதிகாரிகளை சவுதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி பிரதிநிதிகள் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் சந்தித்து பேசினர். ஹவுதிகள் ஈரான் ஆதரவில் செயல்பட்டு வருவதால் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் சவுதி அரேபியா சார்பில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் தம்பியும், பாதுகாப்பு துறை அமைச்சருமான பகாலித் பின் சல்மான், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர், துருக்கி உளவுத்துறையின் தலைவர் இப்ராஹிம் காலின் ஆகியோர் பங்கேற்றனர். இதில் பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் பங்கேற்கவில்லை இதனால் தான் பாகிஸ்தான் எம்பி ஃபஸ்லூர் ரஹ்மான் எம்பி குறிப்பிட்டு விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை