விஜய் ஆண்டனி நடிக்கும் அப்பா குட்டி படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி நடிக்கும் அப்பா குட்டி படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது. இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள புதிய படம் ’அப்பா குட்டி’. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரீத்தி அஸ்ரானி, பகவதி பெருமாள், ஜென்ஸன் திவாகர், அருவி மதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தந்தை - மகள் இடையேயான உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார். இப்படம் அக். 16 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜெயிலர் படத்தின் வெளியீட்டால் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர், நவம்பர் 6 அன்று தீபாவளி வெளியீடாக திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டது. ஆனால், மீண்டும் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அப்பா குட்டி திரைப்படம் வருகிற நவ. 20 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின், முதல் பாடல் வரவேற்பைப் பெற்ற நிலையில், அடுத்தப் பாடல் நாளை வெளியாகின்றது. அப்பா குட்டி திரைப்படம் தெலுங்கு மொழியில் ’நாநாகுட்டி’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி: வெளியீட்டுத் தேதி மாற்றம்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗