\"விஜய் மாமா காப்பாத்துங்க.. ஊரையே இடிக்குறாங்க\" - முதல்வர் வாகனத்தை மறித்த சிறுவர்கள்! என்ன நடந்தது?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: oneindia.com (original report) ↗
\"விஜய் மாமா காப்பாத்துங்க.. ஊரையே இடிக்குறாங்க\" - முதல்வர் வாகனத்தை மறித்த சிறுவர்கள்! என்ன நடந்தது?

திருச்சி: தமிழக முதலமைச்சர் விஜய் இன்று திருச்சியில் இருந்து கார் மூலம் புதுக்கோட்டை சென்றபோது, அவரது காரை இளைஞர்கள், சிறுவர்கள், பொதுமக்கள் வழிமறித்தனர். "விஜய் மாமா காப்பாத்துங்க.. ஊரையே இடிக்குறாங்க" என சிறுவர்கள் கூச்சலிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி விமான நிலையம் அருகே உள்ள செம்பட்டு பகுதியில் 3 தலைமுறையாக வசிப்பவர்களைக் காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதை அடுத்து, திருச்சி வந்த முதல்வர் ஜோசப் விஜய் வாகனத்தை பொதுமக்கள் வழிமறித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி கிழக்கு தொகுதி செம்பட்டு என்.எம்.டி காலனி பகுதியில், சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் இயங்கி வந்த என்.எம்.டி தோல் பதனிடும் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்களின் குடியிருப்புத் தேவைகளுக்காக, அந்தத் தொழிற்சாலைக்கு எதிரே இந்த இடம் ஒதுக்கப்பட்டது. இந்த குடியிருப்பு பகுதியில் மூன்று தலைமுறைகளைக் கடந்து எவ்வித பாகுபாடுமின்றி, சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தாங்கள் குடியிருந்து வரும் இந்த முழு இடத்தையும் சிலர் விலைக்கு வாங்கியுள்ளதாகக் கூறி, அப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், 10 நாட்களுக்குள் வீடுகளைக் காலி செய்ய வேண்டும் எனவும் அதில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதையடுத்து, தங்களின் வாழ்விடத்தைக் காப்பாற்றக் கோரி, இன்று திருச்சி விமான நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்களை, 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது தங்களின் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் போர்டுகளை கைகளில் ஏந்தியும், தங்களுக்கு நீதி வேண்டும் என்று கேட்டும் முழக்கங்களை எழுப்பினர். "விஜய் மாமா காப்பாத்துங்க.. ஊரையே இடிக்குறாங்க" என சிறுவர்கள் சிலர் கூச்சலிட்டனர். #WATCH | "விஜய் மாமா காப்பாத்துங்க.. ஊரையே இடிக்குறாங்க.."தனியார் கல்லூரிக்காக செம்பட்டு கிராம மக்களை வெளியேற்றுவதாக குற்றச்சாட்டு.திருச்சி வந்த முதலமைச்சர் விஜய் வாகனத்தை சிறுவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு கிராம மக்களும் மறித்து முழக்கமிட்டனர். #Trichy | #Vijay https://t.co/f9xC4X3KRY வாகனத்தை பொதுமக்கள் மறித்ததால் விஜய் கார் நிறுத்தப்பட்டது. அப்பகுதி மக்கள் அளித்த கோரிக்கை மனுவை முதல்வர் விஜய் பெற்றுக்கொண்டார். முதல்வரின் வாகனம் முற்றுகையிடப்பட்டதை அடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் உடனடியாக விரைந்து வந்து, சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சாலையின் ஓரமாக அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக முதல்வர் விஜய், கடந்த சட்டசபை தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். பின்னர் அவர் ராஜினாமா செய்த நிலையில் திருச்சி கிழக்கில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை