விஜய்சேதுபதி விலகல்! அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே படத்தின் தமிழ் டீசர்!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Entertainment ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
விஜய்சேதுபதி விலகல்! அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே படத்தின் தமிழ் டீசர்!

அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே படத்தின் தமிழ் டீசர் வெளியானது குறித்து... அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே - யூடியூப் மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே படத்தின் தமிழ்ப் பதிப்பின் டீசர் வெளியானது. மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் அவெஞ்சர்: டூம்ஸ்டே, வருகிற டிசம்பர் 18 ஆம் தேதியில் வெளியாகவிருக்கிறது. முந்தைய அவெஞ்சர்ஸ் படங்களில் நடித்த கிறிஸ் எவன்ஸ் (கேப்டன் அமெரிக்கா), கிறிஸ் ஹேம்ஸ்வொர்த் (தார்), டாம் ஹிட்டில்ஸ்டன் (லோகி), பால் ரூட் (ஆன்ட்மேன்), பெனடிக்ட் கம்பர்பேட்ச் (டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்), செபாஸ்டின் ஸ்டான் (பகி), ஆண்டனி மேக்கி (ஃபால்கன்), பால் பெட்டனி (விசன்) உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தில் அயர்ன்மேன் பாத்திரம் உயிரிழந்ததால், டூம்ஸ்டே படத்தில் அயர்ன்மேன் பாத்திரம் இருக்காது. இருப்பினும், அயர்ன்மேன் பாத்திரத்தில் நடித்த ராபர்ட் டோனி ஜூனியர், இந்தப் படத்தில் டாக்டர் டூம்ஸ்டே கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே படத்தின் தமிழ்ப் பதிப்பின் டீசரை படக்குழு புதன்கிழமையில் வெளியிட்டது. உலகளவில் வருகிற டிசம்பர் 18 ஆம் தேதியில் படம் வெளியாகவுள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் ஒருநாள் முன்கூட்டியே டிசம்பர் 17-ல் வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, அவெஞ்சர்ஸ் படங்களில் அயர்ன்மேன் கதாபாத்திரத்துக்கு தமிழ்ப் பதிப்பில் ரவிசங்கர் தேவநாராயணன் குரல் கொடுத்திருந்தார். ஆனால், எண்ட்கேம் படத்தில் மட்டும் அயர்ன்மேன் பாத்திரத்துக்கு நடிகர் விஜய்சேதுபதி குரல் கொடுத்தார். இருப்பினும், அயர்ன்மேன் பாத்திரத்துக்கு விஜய்சேதுபதி குரல் கொடுத்தது ரசிகர்களிடையே விமர்சனங்களைப் பெற்றது. இதனிடையே, டூம்ஸ்டே கதாபாத்திரத்துக்கும் விஜய்சேதுபதி குரல் கொடுக்க வாய்ப்பிருப்பதாக சமூக ஊடகங்களில் கூறப்பட்ட நிலையில், புதன்கிழமை வெளியான டீசரில் டூம்ஸ்டே கதாபாத்திரத்துக்கு ரவிசங்கர் குரல் கொடுத்துள்ளார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை