Yelagiri: ஏலகிரி மலை லாட்ஜில் ரயில்வே பெண் ஊழியர் மர்ம மரணம்! ரூம் போட்ட ஆண் ஊழியர் கைது

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: oneindia.com (original report) ↗
Yelagiri: ஏலகிரி மலை லாட்ஜில் ரயில்வே பெண் ஊழியர் மர்ம மரணம்! ரூம் போட்ட ஆண் ஊழியர் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலை சுற்றுலாத் தலத்தில் உள்ள விடுதியில் ரயில்வே பெண் ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கைத் தற்கொலை வழக்கிலிருந்து கொலை வழக்காக மாற்றிய போலீசார், அவருடன் தங்கியிருந்த ஆண் ஊழியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த ரெட்டி மாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த சங்கர் ராவ் என்பவர் ரயில்வே துறையில் பணியாற்றி வந்தார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் கருணை அடிப்படையில் அவரது மனைவி தமிழரசி (43) ரயில்வே துறையில் பணியமர்த்தப்பட்டார். இவர் ஆம்பூர் ரயில் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஜெய் ஸ்ரீ ராம், ராகுல் ராம், சரவணராவ் என மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்த நாராயணமூர்த்தியின் மகன் யுவராஜ் (44) என்பவர் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் பணியாற்றி வந்தார். தமிழரசிக்கும், யுவராஜுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் அவ்வப்போது பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் நேற்று இருவரும் ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏலகிரி மலை சுற்றுலாத் தலத்திற்குச் சென்று, அங்குள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். அப்போது இருவரும் ஒன்றாக மது அருந்தியதாகவும், பின்னர் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, தமிழரசி கழிவறைக்குச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த யுவராஜ், விடுதி காவலாளியின் உதவியுடன் கதவைத் திறந்து பார்த்தபோது, தமிழரசி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த ஏலகிரி மலை காவல்துறையினர், தமிழரசியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், உடல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதலில் தற்கொலை வழக்காக விசாரிக்கப்பட்ட இந்தச் சம்பவம், பின்னர் கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதையடுத்து, யுவராஜைக் கைது செய்த காவல்துறையினர், தமிழரசியின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து கொலையா அல்லது தற்கொலையா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏலகிரி மலை விடுதியில் ரயில்வே பெண் ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை