யூடியூப் மியூசிக்கில் ஏஐ பாடல்களைக் கண்டுபிடிக்கும் புதிய அம்சம் குறித்து... ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட பாடல்களைக் கண்டுபிடிக்கும் புதிய அம்சம் யூடியூப் மியூசிக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்துகுச் சொந்தமான யூடியூப் மியூசிக் செயலியை 119 நாடுகளில் உள்ள கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஏஐ வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், பலர் செய்யறிவு மூலம் பாடல்களை உருவாக்கி அதனை யூடியூப் மியூசிக் செயலில் பதிவேற்றம் செய்து விடுகின்றனர். இதனால் யூடியூப் மியூசிக்கில் உள்ள பல பாடல்கள் செய்யறிவு மூலம் உருவாக்கப்பட்டதா? அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்டதா? என பயனர்கள் குழப்பமடைகின்றனர். இந்த நிலையில், தற்போது யூடியூப் மியூசிக்கில் ஒரு பாடலை இயக்கும்போது, அந்தப் பாடலின் தலைப்பு மற்றும் கலைஞர் பெயருக்குக் கீழே ஒரு சிறிய ஏஐ குறியீடு காட்டப்படும். இடனடிப்படையில் எளிதாக அது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட பாடல் என்பதை பயனர்கள் தெரிந்துகொள்ளலாம். அந்த ஏஐ குறியீட்டை கிளிக் செய்தால், பாடல் முழுவதும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதா? அல்லது சில பகுதிகளுக்காக ஏஐ பயன்படுத்தப்பட்டதா? போன்ற முழு விவரங்களும் அதில் இடம்பெறும். இந்த அம்சத்தை ஏஐ கண்டறிதல் கருவிகளின் உதவியுடன் யூடியூப் மியூசிக் செயல்படுத்தியுள்ளது. மேலும், ஆப்பிள் மியூசிக், ஸ்பாட்டிஃபை போன்ற இசைத் தளங்களும் யூடியூப் மியூசிக் போன்று ஏஐ பாடல்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடதத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
யூடியூப் மியூசிக்கில் ஏஐ பாடல்களைக் கண்டுபிடிப்பது எப்படி?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗