யு19 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்த முன்னாள் வீரர்களின் மகன்கள்!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Sports ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
யு19 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்த முன்னாள் வீரர்களின் மகன்கள்!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (அக்டோபர் 30) அறிவித்துள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (அக்டோபர் 30) அறிவித்துள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஓமனில் வருகிற நவம்பர் 5 ஆம் தேதி தொடங்கி 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் வீரர்களான ராகுல் டிராவிட் மற்றும் வீரேந்திர சேவாக்கின் மகன்களான அன்வே டிராவிட் மற்றும் ஆர்யவீர் சேவாக் ஆசிய கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். 17 வயதாகும் அன்வே டிராவிட் இந்த மாதத்தின் தொடக்கத்தில் 100 பந்துகளில் 151 ரன்கள் எடுத்து அசத்தினார். இலங்கைக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியிலும் அவர் 67 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார். 19 வயதாகும் ஆர்யவீர் சேவாக் வினு மன்கத் டிராபியில் 143 பந்துகளில் 173 ரன்கள் எடுத்து அசத்தினார். ð¨ News ð¨India U19 squad for ACC Menâs U19 Asia Cup announced.More Details ð½https://t.co/RPWuCiVGBQ ஆசிய கோப்பையில் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. குரூப் பி பிரிவில் வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் மலேசியா அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த இரண்டு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும். 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பைத் தொடருக்கான இந்திய அணி விவரம் லக்‌ஷயா ராய்சந்தனி (கேப்டன்), ஆர்யவீர் சேவாக், வி.கே.வினீத், யஷ்பர்தன் சிங் சௌகான் (துணைக் கேப்டன்), குஷாக்ரா ஓஜா, அர்ஜூன் ராஜ்புட், மனால் சௌகான், அன்வே டிராவிட், ராஜத் பாஹல், வி.யஷ்வீர், ஆர்யன் சவ்சனி, மோஹித் உல்வா, காவ்யா படேல், ஷாவின் வினோத், இஷான் ஷூட். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை