நான் ஒரு பர்கர் சாப்பிட்டாலும் பிரச்சினை. தலைமுடியை வெட்டிக்கொண்டாலும் பிரச்சினை. நான் எடுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட முடிவும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, விமர்சிக்கப்படுகிறது. நான் ஒரு பெண் என்பதாலோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதாலோதான் இப்படி நடக்கிறதோ என்று சில நேரங்களில் எனக்குத் தோன்றுகிறது என்று தான் முடி வெட்டியதால் வரும் ட்ரோல்கள் குறித்து சென்னை மேயர் பிரியா ராஜன் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஏன் எப்போதும் நான் மட்டுமே? நான் என்ன செய்தாலும் அது ஒரு சர்ச்சையாகி விடுகிறது. முதல் நாளில் இருந்து இன்றுவரை, மிகச் சாதாரண விஷயங்கள் கூட ஒரு பிரச்சினையாக மாற்றப்படுகின்றன. நான் ஒரு பர்கர் சாப்பிட்டாலும் பிரச்சினை. தலைமுடியை வெட்டிக்கொண்டாலும் பிரச்சினை. நான் எடுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட முடிவும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, விமர்சிக்கப்படுகிறது. சில நேரங்களில் எனக்குத் தோன்றுகிறது—நான் ஒரு பெண் என்பதாலா, அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதாலா? என் விஷயம் என்று வரும்போது, ஃபெமினிஸ்டுகளும் (பெண்ணியவாதிகளும்) பெண்களுக்காகக் குரல் கொடுப்பதாகக் கூறிக்கொள்பவர்களும் எங்கே மாயமாய் மறைகிறார்கள் என்றே எனக்குப் புரியவில்லை. Why is it always me?Whatever I do seems to become a controversy. From day one until today, even the simplest things become an issue. If I eat a burger, it’s an issue. If I cut my hair, it’s an issue. Every personal choice I make seems to be questioned and judged.Sometimes I… அரசியலில் இருக்கும் பெண்கள் ஒழுக்கமற்றவர்களோ அல்லது மரியாதை பெறத் தகுதியற்றவர்களோ அல்ல. பொது வாழ்க்கையில் ஒரு பெண் இருக்கிறார் என்பதற்காகவே, அவரது தோற்றம், வாழ்க்கை முறை அல்லது தனிப்பட்ட தேர்வுகளை வைத்து அவரை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் சுயமரியாதையும், கண்ணியமும், தன் விருப்பப்படி வாழும் உரிமையும் உண்டு. மேயர் என்ற பதவிக்கு அப்பாற்பட்டு, அந்தப் பெண்ணுக்கான மரியாதையை அளிக்க மறவாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
நான் பர்கர் சாப்பிட்டாலும் பிரச்னை, முடி வெட்டினாலும் பிரச்னை; எனக்கு மட்டும் ஏன் இப்படி? மேயர் பிரியா வேதனை பதிவு
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk