தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படும் 31.37 ஏக்கர் நிலத்திற்குப் பதிலாக வேறு நிலத்தைப் பெற்றுக்கொள்வது குறித்து தமிழக அரசு ஏன் பரிசீலிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மாணவர்களின் கல்வியைக் கருத்தில் கொண்டு, இது குறித்து உயர்மட்ட ஆலோசனை நடத்தி பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சாஸ்த்ரா பல்கலைக்கழக நில ஆக்கிரமிப்பு தொடர்பான விவகாரத்தில், சர்ச்சைக்குரிய நிலத்திற்குப் பதிலாக பல்கலைக்கழக நிர்வாகம் வழங்கும் மாற்று நிலத்தை ஏற்றுக்கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படும் 31.37 ஏக்கர் நிலத்திற்குப் பதிலாக, அவரிடமிருந்து வேறு நிலத்தைப் பெற்றுக்கொள்வது குறித்து தமிழக அரசு ஏன் பரிசீலிக்கக் கூடாது என கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், இது தொடர்பாக உயர் மட்ட அளவில் ஆலோசனை நடத்தி பதில் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. வழக்கின் பின்னணி: தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரத்தில் திறந்தவெளி சிறைச்சாலை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த 31.37 ஏக்கர் புஞ்சை தரிசு நிலத்தைச் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்து, அதில் பிரம்மாண்ட கட்டடங்களைக் கட்டி வகுப்புகளை நடத்தி வருவதாகப் புகார்கள் எழுந்தன. இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை வருவாய்த்துறை உடனடியாக மீட்க கடந்த ஜனவரி 9-ல் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற காரசார வாதம்: இந்நிலையில், இவ்வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. பல்கலைக்கழகத் தரப்பு வாதம்: பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், "தற்போது பல்கலைக்கழகம் அமைந்துள்ள நிலத்திற்குப் பதிலாக, 5 கி.மீ. தொலைவில் உள்ள பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான நிலத்தை அரசுக்கு வழங்கத் தயார்; அல்லது சந்தை மதிப்பின் அடிப்படையில் அந்த நிலத்திற்கான தொகையை அரசுக்குச் செலுத்தத் தயார்" எனத் தெரிவித்தார். தமிழக அரசுத் தரப்பு வாதம்: தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஹரிப்ரியா மற்றும் மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா ஆகியோர், 'அரசின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது' என வாதிட்டனர். நீதிபதிகளின் கருத்து மற்றும் உத்தரவு:தமிழக அரசின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், "சம்பந்தப்பட்ட இடத்தில் ஒரு பெரிய கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது; ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி இதில் அடங்கியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தைத் தமிழக அரசு நேர்மறையாகக் கருத்தில் கொள்ளலாம். ஆக்கிரமிக்கப்பட்ட இடத்திற்குப் பதிலாக வேறு ஒரு இடத்தில் நிலத்தைப் பெற்றுக்கொள்வதில் அரசுக்கு என்ன பிரச்சனை? இது தொடர்பாகத் தமிழக அரசு ஒரு தகுந்த முடிவை எடுக்க வேண்டும்" என்றனர். இதனைத் தொடர்ந்து, மாநில அரசிடம் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்க அவகாசம் வேண்டும் எனத் தமிழக அரசுத் தரப்பில் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு, அந்த இடத்திற்குப் பதிலாக வேறு நிலத்தைப் பெற்றுக்கொள்வது குறித்துத் தமிழக அரசு உயர் மட்ட அளவில் ஆலோசனை நடத்தி, தங்கள் நிலைப்பாட்டைப் பதில் மனுவாகத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்தனர். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
சாஸ்த்ரா பல்கலை. நில விவகாரம்: மாற்று நிலத்தை ஏன்பரிசீலிக்க கூடாது? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
📅
📍 Thanjavur, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk