கூகுள் (யூடியூப்), ஃபேஸ்புக் மற்றும் எக்ஸ் (X Corp) ஆகிய நிறுவனங்கள் அந்த அவதூறு வீடியோக்கள் மற்றும் கருத்துக்களைத் தொடர்ந்து ஒளிபரப்புவதைத் தடுத்து, உடனடியாக நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திவ்யா சத்யராஜ் தொடர்ந்த ரூ.1 கோடி வழக்கு: பயில்வான் ரங்கநாதனுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு தன்னைப் பற்றி அவதூறான கருத்துகளை தெரிவித்ததாகக் கூறி, நடிகர் பயில்வான் ரங்கநாதன் மற்றும் ‘புதிய சிந்தனை’ யூடியூப் சேனலுக்கு எதிராக திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் திவ்யா சத்யராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் ரூ.1 கோடி மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை நீதிபதி கே. கோவிந்தராஜன் திலகவதி வியாழக்கிழமை (செப்டம்பர் 24, 2026) விசாரித்தார். வழக்கு முடியும் வரை, திவ்யா சத்யராஜ் குறித்து கூறப்பட்ட ஆட்சேபத்துக்குரிய கருத்துகளை மேலும் பரப்புவதற்கு பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் அனுமதிக்கக் கூடாது என்று நீதிபதி இடைக்காலத் தடை விதித்தார். மேலும், யூடியூப், பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அந்தக் கருத்துகள் தொடர்ந்து பரப்பப்படுவதை அனுமதிக்கக் கூடாது என்றும் கூகுள் எல்எல்சி, பேஸ்புக் இந்தியா ஆன்லைன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் எக்ஸ் கார்ப் ஆகிய நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணம் தொடர்பாக திவ்யா சத்யராஜ் அளித்த ஒரு பேட்டியே இந்த வழக்குக்கு காரணமாகியுள்ளது. ”ஒரு கணவன், மனைவி இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள் என்பதற்காக மட்டும் ஒன்றாக வாழக்கூடாது, ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பின் காரணமாக ஒன்றாக இருக்க வேண்டும். மதம் மற்றும் ஜாதகப் பொருத்தம் பார்த்து செய்யப்படும் கார்ப்பரேட் திருமணங்களில் எனக்கு உடன்பாடு இல்லை. எனக்கு ஜாதகம் இல்லை. என் தந்தை இதுபோன்ற விஷயங்களில் நம்பிக்கை இல்லாதவர்” என்றும் கூறியிருந்தார். இந்தக் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்து, திவ்யா சத்யராஜின் தந்தையும் நடிகருமான சத்யராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதையடுத்து, தனது பேட்டிக்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் தன்னைப் பற்றி தவறான மற்றும் அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக திவ்யா சத்யராஜ் நீதிமன்றத்தில் கூறியுள்ளார். ரூ.1 கோடி இழப்பீடு கேட்பு தன்னைப் பற்றி அவதூறான கருத்துகளை தெரிவித்ததாகக் கூறி, பயில்வான் ரங்கநாதன் மற்றும் ‘புதிய சிந்தனை’ யூடியூப் சேனலின் உரிமையாளர் மொய்தீன் ஆகியோர் இணைந்து ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று திவ்யா சத்யராஜ் கோரியுள்ளார். மேலும், வழக்கு தொடரப்பட்ட நாள் முதல் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் நாள் வரை ஆண்டுக்கு 12 சதவீத வட்டியையும் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார். எதிர்காலத்தில் தன்னைப் பற்றி அவதூறான கருத்துகளை பேசுவது, எழுதுவது, வெளியிடுவது அல்லது ஒளிபரப்புவது ஆகியவற்றுக்கும் நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தில் கோரியுள்ளார். நீதிபதி கூறியது என்ன? திவ்யா சத்யராஜ் தரப்பில் வழக்கறிஞர் டி. ரவிச்சந்தர் வாதிட்டார். அவரது வாதங்களைப் பரிசீலித்த நீதிபதி, இடைக்காலத் தடை விதிப்பதற்கான முதற்கட்ட காரணங்கள் இருப்பதாகக் கூறினார். அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா சத்யராஜின் நற்பெயர் மற்றும் மதிப்புக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நீதிபதி குறிப்பிட்டார். இடைக்காலத் தடை விதிக்காவிட்டால் அவரது நற்பெயருக்கு பின்னர் சரிசெய்ய முடியாத பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு முடியும் வரை ஆட்சேபத்துக்குரிய கருத்துகளை மேலும் பரப்புவதைத் தடுக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
ரூ.1 கோடி மானநஷ்ட வழக்கு: பயில்வான் ரங்கநாதனுக்கு எதிராக திவ்யா சத்யராஜ் நீதிமன்றத்தில் முறையீடு
📅
📍 Tirunelveli, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk