மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் மின்வெட்டால், ஜெனரேட்டர் போடச் சொன்ன சம்பவம் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தையும் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தையும் கிளப்பியுள்ளது. பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென மின்வெட்டு ஏற்பட்டதால், கட்சி நிர்வாகிகளை ஜெனரேட்டர் போடச் சொன்னார். த.வெ.க ஆட்சியில் தொடர் மின்வெட்டு நிலவுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் சூழலில், மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் த.வெ.க-வின் தேர்தல் மேலாண்மைப் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா பேசிக்கொண்டிருந்தபோதே திடீரென மின் தடை ஏற்பட்டு, அவர் மேடையிலேயே ஜெனரேட்டர் இயக்கச் சொன்ன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் தி.மு.க-வின் முப்பெரும் விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், த.வெ.க ஆட்சியில் ரெண்டே ரெண்டுக்குதான் போட்டி. ஒன்று மின்வெட்டு இன்னொன்று அரிவாள் வெட்டு என்று கூறி த.வெ.க அரசைக் கடுமையாகச் சாடினார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சியில், தமிழ்நாட்டில் பல இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருப்பதாக விமர்சனம் செய்து வரும் நிலையில், மதுராந்தகம் இடைத்தேர்தலில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீர் மின் தடை ஏற்பட்டதால், ஜெனரேட்டர் போடச் சொன்னது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது. அமைச்சர் நிகழ்ச்சியிலேயே மின்வெட்டு ஏற்பட்டிருப்பது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான த.வெ.க 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைப்பதற்கு 118 இடங்கள் தேவை என்பதால், காங்கிரஸ், வி.சி.க, ஐ.யூ.எம்.எல், சி.பி.ஐ, சி.பி.எம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க ஆட்சி அமைதத்தது. முதலமைச்சர் விஜய் அமைச்சரவையில், காங்கிரஸ், வி.சி.க, ஐ.யூ.எம்.எல் இடம்பெற்றுள்ளது. சி.பி.ஐ, சி.பி.எம் கட்சிகள் வெளியே இருந்து ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, மதுராந்தகத்தில் அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற சத்யபாமா ஆகிய இருவரும் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு விஜய் தலைமையிலான த.வெ.க-வில் இணைந்தனர். அதே போல, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற எஸ்.ஜெயக்குமார், இசக்கி சுப்பையா இருவரும் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்தனர். அதே போல, விறாலிமலை தொகுதியில் வெற்றிபெற்ற அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், கரூர் வெற்றிபெற்ற அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்தனர். பெரம்பூர், திருச்சி கிழக்கு 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த த.வெ.க தலைவர் விஜய், ஒருவர் 2 பதவிகளை வகிக்கக்கூடாது என்ற மக்கள் பிரதிநிதிகள் சட்டப்படி திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால், தமிழ்நாட்டில் 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதில் பெருந்துறை, அம்பாசமுத்திரம், திருச்சி கிழக்கு, விறாலிமலை, கரூர் ஆகிய தொகுதிகளில் தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதால், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அக்டோபர் 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த இடைத்தேர்தலில் த.வெ.க சார்பில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதியில் சத்யபாமா வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதே போல, தி.மு.க, அ.தி.மு.க, சி.பி.ஐ, சி.பி.எம், நா.த.க ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால், இடைத்தேர்தல் பிரசாரக் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், த.வெ.க சார்பில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலை ஆதரித்து த.வெ.க-வின் தேர்தல் மேலாண்மைப் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா, மதுராந்தகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென மின்வெட்டு ஏற்பட்டதால், கட்சி நிர்வாகிகளை ஜெனரேட்டர் போடச் சொன்னார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிக்கொண்டிருக்கும்போது மின்வெட்டு ஏற்பட்டதால், ஜெனரேட்டர் போடச் சொன்னது ஊடகங்களில் ஒளிபரப்பாகி கவனத்தப் பெற்றது. மின்வெட்டு இல்லை என்று த.வெ.க அமைச்சர்கள் கூறிவரும் நிலையில், அவர்கள் நிகழ்ச்சியிலேயே மின்வெட்டு ஏற்பட்டு ஜெனரேட்டர் போடச் சொல்லியிருப்பது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. A seasoned journalist with 10+ years of experience in print, digital, and broadcast media (Indian Express Tamil, Hindu Tamil, Jaya Plus). Currently a Senior Sub-Editor, he blends his M.A. in History with a deep commitment to news authenticity and social impact. As an active poet and short story writer, he brings a unique literary perspective to journalism. Expert in news verification and digital editorial. Highlights: 10+ Yrs Exp M.A. History Poetry & Fiction writer இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
ஜெனரேட்டர் போடச் சொன்ன ஆதவ் அர்ஜுனா: மதுராந்தகம் தேர்தல் பணியின் போது ஏற்பட்ட திடீர் மின் தடை
📅
📍 Tiruppur, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk