மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் 3 புகைப்படங்களை ஆதாரமாகக் காட்டிப் பேசிய அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக எம்.எல்.ஏ-வாக இருந்துவிட்டு த.வெ.க-வில் இணைந்த மரகதம் குமரவேலின் நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது என்றும் திட்டமிட்டுச் செய்யப்பட்ட துரோகம் என்றும் கடுமையாகச் சாடினார். அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டத்தில் தன்னுடன் அமர்ந்திருந்த மரகதம் குமரவேல், அடுத்த சில நிமிடங்களில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்த 3 புகைப்படங்களை வரிசையாகக் காட்டி, த.வெ.க மற்றும் மரகதம் குமரவேலின் நடவடிக்கைகளுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை மேற்கொண்டார். மதுராந்தகம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் கணிதா சம்பத்தை ஆதரித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டத்தில் தன்னுடன் அமர்ந்திருந்த மரகதம் குமரவேல், அடுத்த சில நிமிடங்களில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்த 3 புகைப்படங்களை வரிசையாகக் காட்டி, த.வெ.க மற்றும் மரகதம் குமரவேலின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் காரசாரமான பிரசாரத்தை மேற்கொண்டார். தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான த.வெ.க 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைப்பதற்கு 118 இடங்கள் தேவை என்பதால், காங்கிரஸ், வி.சி.க, ஐ.யூ.எம்.எல், சி.பி.ஐ, சி.பி.எம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க ஆட்சி அமைதத்தது. முதலமைச்சர் விஜய் அமைச்சரவையில், காங்கிரஸ், வி.சி.க, ஐ.யூ.எம்.எல் இடம்பெற்றுள்ளது. சி.பி.ஐ, சி.பி.எம் கட்சிகள் வெளியே இருந்து ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, மதுராந்தகத்தில் அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற சத்யபாமா ஆகிய இருவரும் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு விஜய் தலைமையிலான த.வெ.க-வில் இணைந்தனர். அதே போல, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற எஸ்.ஜெயக்குமார், இசக்கி சுப்பையா இருவரும் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்தனர். அதே போல, விறாலிமலை தொகுதியில் வெற்றிபெற்ற அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், கரூர் வெற்றிபெற்ற அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்தனர். பெரம்பூர், திருச்சி கிழக்கு 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த த.வெ.க தலைவர் விஜய், ஒருவர் 2 பதவிகளை வகிக்கக்கூடாது என்ற மக்கள் பிரதிநிதிகள் சட்டப்படி திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால், தமிழ்நாட்டில் 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதில் பெருந்துறை, அம்பாசமுத்திரம், திருச்சி கிழக்கு, விறாலிமலை, கரூர் ஆகிய தொகுதிகளில் தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதால், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அக்டோபர் 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த இடைத்தேர்தலில் த.வெ.க சார்பில் மதுராந்தகம் தொகுதியில் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அ.தி.மு.க-வில் இருந்து விலகி த.வெ.க-வில் இணைந்த மரகதம் குமரவேல் வேட்பாளராக போட்டியிடுகிறார். அதே போல, தாராபுரம் தொகுதியில் சத்யபாமா போட்டியிடுகிறார். இதனால், அ.தி.மு.க சார்பில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் மதுராந்தகம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் கணிதா சம்பத், தாராபுரம் தொகுதியில் பானுமதி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதுராந்தகம் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் கணிதா சம்பத்தை ஆதரித்து பரப்புரை செய்து இன்று வாக்குகள் சேகரித்தார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, அடுத்தடுத்து 3 புகைப்படங்களைக் காட்டி, “இங்க பாருங்க மரகதம் குமரவேல் ஆலோசனை கூட்டதில் என்னுடன் தான் அமர்ந்திருந்தார். அதுக்கப்புறம் திடீரென எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த 5வது நிமிடம் த.வெ.கவில் இணைந்துவிட்டார்.” என்று ஒவ்வொரு புகைப்படத்தையும் தனித்தனியாக காட்டி கடுமையாக விமர்சனம் செய்தார். வீடியோவைப் பாருங்கள்: அ.தி.மு.க வேட்பாளர் கணிதா சம்பத்தை ஆதரித்து பரப்புரை செய்த எடப்பாடி பழனிசாமி பேசியதாவது; “நன்றாக எண்ணிப்பாருங்கள், இப்போது த.வெ.க-வில் போட்டியிடுகிற மரகதம் குமரவேல், அ.தி.மு.க-வில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக சட்டமன்ற வளாகத்தில் இருக்கும் அ.தி.மு.க அலுவலக அறையில் ஆலோசனைக் கூட்டத்தில் அமர்ந்திருக்கிறார் பாருங்கள்” என்று ஒரு புகைப்படத்தைக் காட்டிப் பேசினார். அடுத்து, மரகதம் குமரவேல், சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் இடம் ராஜினாமா கடிதம் அளிக்கும் புகைப்படத்தைக் காட்டிப் பேசினார். அடுத்த 5-வது நிமிடத்தில் முதல் மாடியில் போய் பொதுப்பணித்துறை அமைச்சர் அலுவலகத்துல போய் சால்வை அணிவித்து த.வெ.க-வில் சேர்ந்து உறுப்பினர் அட்டை வாங்குகிறார். என்று மூன்றாவது புகைப்படத்தைக் காட்டிப் பேசினார். என் பக்கத்த்ல் இருந்த மரகதம் குமரவேல், எவ்வளவு வேகமாக த.வெ.க-வில் சேர்ந்திருக்கிறார் பாருங்கள். அப்படியென்றால், திட்டம் போட்டு செய்து இருக்கிறார்கள். ஒரு கட்சியின் எம்.எல்.ஏ-வின் ராஜினாமா கடிதம் பரிசீலனையில் இருக்கும்போதே, போய் மாற்றுக் கட்சியில் சேருவது என்றால் சட்டத்துக்கு விரோதமானது. அதுதான் நீதிமன்றம் வரைக்கும் போயிருக்கிறோம். சிந்தித்துப் பாருங்கள். அப்படிப்பட்ட கட்சி (த.வெ.க) நம்ம கட்சியைப் பார்த்து நீர்த்துப் போன கட்சி என்று பேசுகிறார்கள். இங்கே எவ்வளவு பேர் இருக்கிறார்கள் பாருங்கள். அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக செயல்படும் மக்கள் கட்சி. வெற்றி, தோல்வி எதுவந்தாலும் கவலைப்படவில்லை. மக்களுடைய பிரச்னை பற்றித்தான் நாம் கவலைப்படுவோம். மக்களுக்கு என்ன பிரச்னை வந்தாலும், அந்தப் பிரச்னையைத் தீர்ப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கின்ற கட்சி. இதில் எக்களைப் பார்த்து , நீத்துப் போன கட்சி என்கிறார்கள். தமிழக வெற்றிக் கழகம் நெல்லிக்காய் மூட்டை மாதிரி அவிழ்த்து விட்டால் சிதறிப் போயிடும்.” என்று காட்டமாகப் பேசினார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. A seasoned journalist with 10+ years of experience in print, digital, and broadcast media (Indian Express Tamil, Hindu Tamil, Jaya Plus). Currently a Senior Sub-Editor, he blends his M.A. in History with a deep commitment to news authenticity and social impact. As an active poet and short story writer, he brings a unique literary perspective to journalism. Expert in news verification and digital editorial. Highlights: 10+ Yrs Exp M.A. History Poetry & Fiction writer இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
'என் பக்கத்தில் இருந்த மரகதம் குமரவேல்'; மதுராந்தகத்தில் அடுத்தடுத்து 3 போட்டோக்களை காட்டி இ.பி.எஸ் பிரசாரம்
📅
📍 Tiruppur, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk