எந்தவொரு அமைப்பிலும் ஒரு முடிவு எடுக்கும்போது “வேறுபட்ட கருத்துக்களும், கருத்து வேறுபாடுகளும், எழுவது இயல்பான ஒன்று தான் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் மேலாண்மை தொடர்பான தகவல் தொழில்நுட்ப அமைப்பில் அதிகாரங்கள் மையப்படுத்தப்படுவதாக கூறியுள்ள தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி, ஆகிய இருவரும், வாக்காளர் பட்டியல் தயாரித்தல், பெயர்களைச் சேர்த்தல், நீக்குதல், திருத்துதல் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலித்தல் போன்றவை சட்டப்படி குறிப்பிட்ட தேர்தல் அதிகாரிகளின் பொறுப்பாக உள்ளது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: அதே நிலையில், இ.சி.ஐ. நெட் (ECINet) மற்றும் அதன் முன்னோடியான இ.ஆர்.ஓ.நெட் (ERONet) ஆகிய தகவல் தொழில்நுட்ப அமைப்புகளின் செயல்பாடுகள் அந்த அதிகாரிகளின் நடைமுறை சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக இருக்கிறது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைமை இயக்குநர் மட்டத்தில் அணுகல் மற்றும் செயல்பாடுகள் மையப்படுத்தப்படுவதாக இருக்கிறது என்று சந்து தனது குறிப்புகளில் தெரிவித்துள்ளார். இரு தேர்தல் ஆணையர்களின் இந்த குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) நடவடிக்கைகளில் இருந்து தங்களை இருட்டில் வைத்திருப்பது, புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது மற்றும் பெயர்களை நீக்குவது குறித்து மூன்று தேர்தல் ஆணையர்களில் இருவர் புகார் அளித்திருப்பது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் புலனாய்வு சுட்டிக்காட்டியிருந்தது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் விரிவான பதில் அளித்துள்ளது. தனது பதிலில் தேர்தல் ஆணையம், எந்தவொரு அமைப்பிலும் ஒரு முடிவு எடுக்கும்போது “வேறுபட்ட கருத்துக்களும், கருத்து வேறுபாடுகளும், எழுவது இயல்பான ஒன்று தான். ஒரு இறுதி முடிவு எடுக்கப்படுவதற்கு முன்பு, அவை முடிவெடுக்கும் செயன்முறையின் ஒரு அங்கமாக இருக்கின்றன. மூன்று ஆணையர்கள் மட்டுமன்றி, தேர்தல் முறையை மேம்படுத்துவதற்காக ஆணையத்தின் ஒவ்வொரு அதிகாரியும் தனது ஆலோசனைகளை ஆணையத்திற்கு வழங்க முழு அதிகாரம் பெற்றுள்ளனர்” என்று கூறியுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் புலனாய்வு என்ன கண்டுபிடித்தது? தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர், தங்களை இருட்டில் வைத்திருப்பது, புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது மற்றும் பெயர்களை நீக்குவது குறித்து அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளதை எக்ஸ்பிரஸ் புலனாய்வு அறிக்கை கண்டறிந்துள்ளது. புதிய வாக்காளர்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அவர்கள் 'அதிகாரப்பூர்வமற்றவை மற்றும் சட்டவிரோதமானவை' என்று குறிப்பிட்டனர். மேலும், மாநில அதிகாரிகளை புறக்கணிக்கும் வகையில் வாக்காளர் தரவுத்தளத்தின் அணுகல் டெல்லியில் 'மையப்படுத்தப்படுவதற்கு' எதிராகவும் அவர்கள் எச்சரித்தனர். வாக்காளர் மென்பொருளின் நம்பகத்தன்மை குறித்த கவலைகள் எழுந்ததையடுத்து, கருத்து வேறுபாடு கொண்ட இந்த ஆணையர்கள் மத்திய அமைச்சரவைச் செயலாளரின் (Cabinet Secretary) கதவைக் கூடத் தட்டினர். இது தேர்தல் ஆணையத்திற்குள் முன்னெப்போதும் இல்லாத ஒரு விரிசலைக் குறிப்பதோடு, அதன் செயல்பாடுகளின் மீதும் ஒரு சந்தேக நிழலை ஏற்படுத்தியுள்ளது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
இந்தியன் எக்ஸ்பிரஸ் புலனாய்வு: ஆணையர்கள் புகாருக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk