“வெற்றிப் பயணம்” திட்டம் : முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Politics ✍️
“வெற்றிப் பயணம்” திட்டம் : முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (21.9.2026) தலைமைச் செயலகத்தில், “வெற்றிப் பயணம்” திட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 24.8.2026 அன்று சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ், தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் வசிக்கும் மகளிரும் போக்குவரத்துக் கட்டணத்தால் தமது வாய்ப்புகளை இழக்கக்கூடாது என்ற சமூகநீதிச் சிந்தனையை இவ்வரசு முதன்மையாகக் கொண்டுள்ளது என்றும், இதனைக் கருத்தில் கொண்டு, மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, பெருமளவில் பயனளித்திடும் விதமாக, ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில், தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்கள். தற்போது, 7 அரசு போக்குவரத்துக் கழகங்களின் நகர சாதாரணப் பேருந்துகள் மற்றும் 40 கி.மீ. வரையிலான மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றிப் பயணம் செய்து வருகின்றனர். “வெற்றிப் பயணம்” திட்டத்தின் மூலம் இச்சேவை மாநகர, நகர்ப்பகுதிகளில் இயங்கும் Express, LSS, டீலக்ஸ் (Deluxe) அரசுப் பேருந்துகள், புறநகர் சாதாரணப் பேருந்துகள் (Mofussil Ordinary) மற்றும் 40 கி.மீ.க்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகள் (Ghat Ordinary) ஆகியவற்றிற்கும் விரிவுபடுத்தப்பட்டு, மொத்தமாக 12,692 பேருந்துகள் இத்திட்டத்தின்கீழ் கொண்டுவரப்படவுள்ளன. இதன்மூலம், 7 அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் மொத்த 18,413 திட்டமிடப்பட்ட பேருந்துகளில் 12,692 பேருந்துகள் (69 விழுக்காடு), மொத்த 1,94,649 நடைகளில் (Singles) 1,65,312 நடைகள் (85 விழுக்காடு) இயக்கப்படும். நாளொன்றுக்கு சுமார் 84.32 இலட்சம் மகளிர் இத்திட்டத்தின்மூலம் பயன்பெறுவார்கள். மேலும், “வெற்றிப் பயணம்” பேருந்துகளின் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களுடனான (ETM) இணைப்புப் பணி நிறைவடைந்துள்ளது. சோதனை மற்றும் சரிபார்ப்புப் பணிகள் 25.09.2026-க்குள்ளும், சோதனை ஓட்டம் 27.09.2026 அன்றும் மேற்கொள்ளப்படும். “வெற்றிப் பயணம்” திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2.10.2026 அன்று தொடங்கி வைக்கவுள்ளார். இத்திட்டத்தின் மூலம், மாநிலம் முழுவதும் தமிழக மகளிருக்கான எளிதில் அணுகக்கூடிய பொதுப் போக்குவரத்து வசதி பெருமளவில் கிடைக்கும். மேலும், மாணவிகள் தொலைதூரத்தில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்லவும், மகளிர் தங்கள் பணியிடங்களுக்குச் செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசியச் சேவைகளுக்கும் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்க இயலும். இக்கூட்டத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ.விஜய் தமிழன் பார்த்திபன், தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார், இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மு.அ.சித்திக், இ.ஆ.ப.,போக்குவரத்துத் துறை செயலாளர் இல.நிர்மல்ராஜ், இ.ஆ.ப., மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஸ்டார்பக்ஸ் உலகளாவிய திறன் மையம் – முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்! மீனவர்களின் இடத்தில் தலைமைச் செயலகம்: யாருடைய ஆசைக்காகக் கட்டப்படுகிறது? – மு.க.ஸ்டாலின் கேள்வி? தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையில் உடைப்பு – அன்புமணி கண்டனம்! ஆசிய விளையாட்டுப் போட்டி : வெள்ளி பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவன் – முதலமைச்சர் விஜய் வாழ்த்து! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை