கிராம வங்கி வேலை வாய்ப்பு; 13706 காலியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்க மறக்காதீங்க

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Business ✍️
கிராம வங்கி வேலை வாய்ப்பு; 13706 காலியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்க மறக்காதீங்க

IBPS RRB Exam 2026: வங்கி வேலை வேண்டுமா? ஊரக வங்கிகளில் 13706 பணியிடங்கள்; ஆன்லைன் விண்ணப்பம்; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை இதுதான் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) நாடு முழுவதும் உள்ள பிராந்திய கிராமப்புற வங்கிகளில் (RRB) அலுவலக உதவியாளர் (Clerk) மற்றும் துணை மேலாளர் (Assistant Manager) உள்ளிட்ட அதிகாரிகள் காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 13706 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள், அந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் உள்ளூர் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதாவது அந்த மொழியில் பேசவும், எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். காலியிடங்களின் விவரம் Office Assistant (Multipurpose) - 8183 Officer Scale-I (Assistant Manager) - 4256 Officer Scale-II General Banking Officer (Manager) - 666 Officer Scale-II (Agriculture Officer) – 38 Officer Scale-II (Marketing Officer) - 16 Officer Scale-II (Treasury Manager) – 18 Officer Scale-II (Law) – 46 Officer Scale-II (CA) – 81 Officer Scale-II (IT) - 182 Officer Scale-III (Senior Manager) - 220 கிளர்க் பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும். கணினியை இயக்க தெரிந்திருக்க வேண்டும். துணை மேலாளர் பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும். கணினியை இயக்க தெரிந்திருக்க வேண்டும். பிற அதிகாரிகள் பணியிடங்களுக்கு, அந்தந்த பிரிவுகளில் பட்டப்படிப்பு அல்லது முதுநிலை படிப்புகளை படித்திருக்க வேண்டும். கிளர்க் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர் 01.09.2026 அன்று 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர் 01.09.2026 அன்று 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். பிற அதிகாரிகள் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர் 01.09.2026 அன்று 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளி (PWD) பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு. கிளர்க் பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு தேர்வுகள் மட்டுமே உண்டு. இதற்கு நேர்முகத் தேர்வு கிடையாது. துணை மேலாளர் பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று படி நிலைகளில் தேர்வு முறை இருக்கும். பிற அதிகாரிகள் பணியிடங்களுக்கு ஒரே ஒரு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என தேர்வு செயல்முறை இருக்கும். தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் தேர்வுகளாக மட்டுமே நடைபெறும். எழுத்துத் தேர்வு கிடையாது. முதல்நிலைத் தேர்வு: கிளர்க் மற்றும் துணை மேலாளர் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் திறனறிதல் (Reasoning ability) மற்றும் கணிதத்தில் (Numerical ability) இருந்து தலா 40 கேள்விகள் என மொத்தம் 80 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 45 நிமிடங்கள் மட்டுமே. முதல்நிலைத் தேர்வு தகுதித் தேர்வு மட்டுமே. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுவோர் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இந்த முதல்நிலைத் தேர்வுகள் வருகின்ற நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதன்மைத் தேர்வு: கிளர்க் மற்றும் துணை மேலாளர் பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம், திறனறிதல் மற்றும் கணிதம் மற்றும் பொது அறிவு அல்லது வங்கி தொடர்பான கேள்விகள் (General/ Financial Awareness) என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 2 மணி நேரம். இந்த தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலே வேலை கிடைக்கும். இந்த முதன்மைத் தேர்வுகள் டிசம்பர் அல்லது பிப்ரவரி மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கிளர்க் பணியிடங்களுக்கு முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். பின்னர் இறுதி தேர்ச்சிப் பட்டியல் வெளியிடப்பட்டு, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். அதே நேரம் துணை மேலாளர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற்ற பின், இறுதி பட்டியல் வெளியிடப்படும். பிற அதிகாரிகள் பணியிடங்களுக்கு ஒரே ஒரு ஆன்லைன் தேர்வுக்கு பின்னர், நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர். பின்னர் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். விண்ணப்பிக்கும் முறை இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை தேர்வர்கள் ஆன்லைனில் https://www.ibps.in/ என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, ஓ.பி.சி மற்றும் இ.டபுள்யூ.எஸ் பிரிவினருக்கு ரூ.850 ஆக உள்ளது. எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் பிரிவுகளுக்கு ரூ.175 ஆக உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.09.2026 இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. He is working as a Senior Sub Editor in Indian Express Tamil. He has been working in this organization for more than 4 years. He writes news related to politics, education and employment opportunities. Educational Qualification: Bachelor's Degree in Information Technology Experience: More than 5 years of experience in the news industry. Expertise: He writes education-related news ranging from school and college exams, results, and other information to exams like NEET and JEE. Additionally, he is also writing about the latest job news on TNPSC, Railways, Bank exams and Tamil Nadu and India-wide job opportunities. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை