8ம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்.. தமிழக அரசுக்கு நன்றி சொன்ன தேவகோட்டை மாணவர்கள்!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️
8ம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்.. தமிழக அரசுக்கு நன்றி சொன்ன தேவகோட்டை மாணவர்கள்!

சிவகங்கை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில், மாணவர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். தமிழ்நாட்டில் இன்று முதல் காமராஜர் காலை உணவுத் திட்டம் 8ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் திருவான்மியூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல் பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனால் காலை உணவுத் திட்டம் மூலமாக சுமார் 35 லட்சம் மாணவர்கள் பயன் அடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்திற்காக மட்டும் தமிழக அரசு சார்பாக ரூ.217.63 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 44,984 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. திங்கட்கிழமை உப்புமா, செவ்வாய் கிழமையன்று கிச்சடி, புதன்கிழமையன்று பொங்கல், வியாழக்கிழமையன்று உப்புமா, வெள்ளிக்கிழமை இனிப்பு வகை உணவு அளிக்கப்படுகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இன்று காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ஸ்ரீதர், ஆசிரியை சிவரஞ்சனி, நகராட்சி பணியாளர் தேன்மொழி, உணவுப் பணியாளர் தமிழ்செல்வி ஆகியோர் செய்திருந்தனர். காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர். இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டதால், மகிழ்ச்சியடைந்த மாணவ, மாணவியர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் காலை உணவுத் திட்டத்தின் கீழ் சத்தாண உணவு மாணவர்களுக்கு முறையாக வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யவும் தமிழக அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை