ஜெம் வீரமணி வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் அதிகாரிகளுக்கு சம்மன்.. ஏன்?

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️
ஜெம் வீரமணி வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் அதிகாரிகளுக்கு சம்மன்.. ஏன்?

சென்னை கிரானைட் தொழிலதிபர் ஆர். வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கில் நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்ததையடுத்து விசாரணை தீவிரமடைந்துள்ளது. வீடியோ ஆதாரம் இருந்தும் சிறுமியையும் சம்பவ இடத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை என கூறி வழக்கை முடிக்க முயன்ற போலீசுக்கு, மீண்டும் மேல் விசாரணை நடத்தி 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. செய்தியாளர் - M.மீரா சென்னையைச் சேர்ந்த கிரானைட் தொழிலதிபர் ஆர். வீரமணி மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு, 2025ஆம் ஆண்டு குழந்தைகள் நலத்துறையுடன் தொடர்புடைய தன்னார்வலர் ஒருவர் போலீசாரிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்தது. அப்போது ஆதாரமாக சமர்பிக்கப்பட்ட வீடியோவில் இருக்கும் சிறுமி யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறப்பட்டது. மேலும் அந்த வீடியோவில் இருப்பவர் வீரமணிதான் என்பதையும் சரியாக அடையாளம் காண முடியவில்லை என்பதால் இந்த வழக்கை முடித்து வைக்கவுள்ளோம் என்றும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 2026, ஆகஸ்ட் 19-ஆம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், காவல்துறைக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். வீடியோ ஆதாரம் இருந்தும் சம்பவ இடத்தையோ சிறுமியையோ கண்டுபிடிக்க முடியவில்லை எனக் கூறி வழக்கை முடிக்க முடியாது என்று விமர்சித்த நீதிபதி, மீண்டும் விரிவான மேல் விசாரணை நடத்தி 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ஆர். வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. வீரமணி மற்றும் அவரது தொடர்புடைய நபர்கள் சார்ந்த 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையில் செல்போன்கள், ஆவணங்கள் மற்றும் பல்வேறு மின்னணு ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரு பென் டிரைவில் இருந்ததாகக் கூறப்படும் வீடியோ தொடர்பாக நடந்த ஆரம்பகட்ட விசாரணைக்குப் பின்னர், அந்த வீடியோவில் இருப்பவர் வீரமணி என அடையாளம் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்திருந்தனர். இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி வீரமணி, அவரது தொடர்புடைய மகேந்திர சிம்மன் மற்றும் சாந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். இதற்கிடையே, வீரமணியின் நிறுவனத்தில் சுமார் 23 ஆண்டுகள் பணியாற்றியதாகக் கூறப்படும் கணேசன் என்பவரையும் போலீசார் செப்டம்பர் 22ஆம் தேதி கைது செய்தனர். குற்றச்சாட்டுக்கு தொடர்புடைய வீடியோவை போலீசாரிடம் தெரிவிக்காமல் வைத்திருந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையிலேயே அடுத்தகட்டமாக 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீரமணியின் அலுவலகம் மற்றும் தி.நகரில் உள்ள அவரது இல்லம் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனைகள் நடைபெற்றது. கைப்பற்றப்பட்ட செல்போன்கள், ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்களை ஆய்வு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்களை மறைப்பதற்கோ அல்லது விசாரணையை திசைதிருப்புவதற்கோ பணப் பரிமாற்றங்கள் மற்றும் நிலப் பரிவர்த்தனைகள் நடைபெற்றனவா என்பதையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கை முன்பு விசாரித்த விபச்சார தடுப்புப் பிரிவு உதவி ஆணையர் யாஸ்மின், காவல் ஆய்வாளர்கள் மகேஷ் குமார், ராஜ லட்சுமி ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். மேலும் வழக்கை முடித்து வைத்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை